`200 துப்புரவுத் தொழிலாளர்களுக்கு சுத்திகரிப்பு இயந்திரங்கள்’ - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு | Delhi CM Arvind Kejriwal Flags off 200 Sewer Cleaning Machines

வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (02/03/2019)

கடைசி தொடர்பு:20:40 (02/03/2019)

`200 துப்புரவுத் தொழிலாளர்களுக்கு சுத்திகரிப்பு இயந்திரங்கள்’ - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி அரசின் சார்பாக 200 மலக்குழி இயந்திரங்களை துப்புரவுத் தொழிலாளர்களுக்குக் கொடுத்து இதைத் தெரிவித்திருக்கிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். 

அரவிந்த் கெஜ்ரிவால்

``டெல்லியைப் பொறுத்தவரை இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள். மனித வாழ்வின் பாதுகாப்பையும் மரியாதையையும் உறுதி செய்வதற்கான நிகழ்வைத் தொடங்கியிருக்கிறோம். இந்த இயந்திரங்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் மலக்குழிகளில் இறங்கும் வழக்கத்துக்கு மாற்றத்தைக் கொண்டுவரும்” - டெல்லி அரசின் சார்பாக 200 மலக்குழி இயந்திரங்களை துப்புரவுத் தொழிலாளர்களுக்குக் கொடுத்து இதைத் தெரிவித்திருக்கிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி தண்ணீர் ஆணையத்தின் அதிகாரிகள் இணைந்து தயாரித்த இந்தத் தொழில்நுட்பத்தை வைத்து சிறிய மலக்குழிகளை சுத்தப்படுத்த முடியும். ஏற்கெனவே மலக்குழித் துப்புரவு வேலைகளில் ஈடுபட்டிருக்கும் 200 தொழிலாளர்களுக்கு இந்த இயந்திரங்கள் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது டெல்லி அரசு. ஹைட்ராலிக், ஜெட்டிங், ரோடிங் தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த இயந்திரங்கள், 30 அடி ஆழம் வரையிலான மலக்குழிகளைத் தூர்வாரும் திறன் கொண்டது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கேரளாவில் பொறியியல் மாணவர்கள் இணைந்து தயாரித்திருக்கும் ரோபோட்டிங் துப்புரவு இயந்திரங்களுக்கான வேலையைத் தொடங்கியிருக்கிறது அரசு. இந்தியாவில், நடைமுறையில் மலக்குழி துப்புரவுத் தொழிலாளர்களுக்கு இயந்திரங்களை அளிக்கும் முதல் முயற்சியை டெல்லி அரசு தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. 


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close