சம்ஜவுதா விரைவு ரயில்சேவை மீண்டும் தொடக்கம்! | Samjhauta fast train service begins today

வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (03/03/2019)

கடைசி தொடர்பு:09:42 (03/03/2019)

சம்ஜவுதா விரைவு ரயில்சேவை மீண்டும் தொடக்கம்!

புல்வாமா தாக்குதலால் நிறுத்தப்பட்டிருந்த இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சம்ஜவுதா ரயில் சேவை இன்று (மார்ச் 3-ம் தேதி) முதல் மீண்டும் இயக்கப்படவுள்ளது.

சம்ஜவுதா ரயில்சேவை

`இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சம்ஜவுதா ரயில்சேவை இன்று முதல் டெல்லியிருந்து மீண்டும் தொடங்கும்' என இந்திய ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படை விமானி அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்தால் விடுவிக்கப்பட்டுள்ளதால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில்சேவை மீண்டும் தொடங்கவுள்ளது.

ரயில்

இன்று  (மார்ச் 3-ம் தேதி) முதல் டெல்லியில் இருந்து இந்தியா பாகிஸ்தான் எல்லையான அட்டாரி வரையிலும் ரயில் இயக்கப்படும். அதேபோல, பாகிஸ்தானின் லாகூரில் இருந்து வாஹா வரையிலும் வரும் திங்கள் முதல் ரயில்சேவை தொடங்கப்படும் என்று அந்நாட்டு ரயில்வே தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால், வழக்கம்போல ரயில் சேவையானது திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் லாகூரில் இருந்து இயக்கப்படும். அதேபோல, டெல்லியில் இருந்து புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரயில்சேவை இயக்கப்படுகிறது.

1976ம் ஆண்டு சிம்லா உடன்படிக்கையின்படி இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான நட்புஉணர்வின் அடிப்படையில் சம்ஜவுதா விரைவு ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது!
 


[X] Close

[X] Close