`இரண்டு பகுதிகளில் காயம்; எந்த ரகசிய சிப்-பும் இல்லை!’ - தொடர் சிகிச்சையில் அபிநந்தன் #AbhinandanReturns | In the MRI scan of the Abhinandan, the doctors did not find any bugs

வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (03/03/2019)

கடைசி தொடர்பு:07:18 (04/03/2019)

`இரண்டு பகுதிகளில் காயம்; எந்த ரகசிய சிப்-பும் இல்லை!’ - தொடர் சிகிச்சையில் அபிநந்தன் #AbhinandanReturns

விங் கமாண்டர் அபிநந்தனுக்கு தண்டுவடப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அபிநந்தன்

பாகிஸ்தானில் இருந்து தாயகம் திரும்பியுள்ளார் இந்திய விமானி அபிநந்தன். தாயகம் திரும்பிய அன்றைய இரவே விமானப்படை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்குச் சிகிச்சைகள் வழங்கப்பட்டன. பின்னர் நேற்று நாள் முழுவதும் அவருக்கு பல்வேறு விதமாக சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது அவர் டெல்லியில் உள்ள ஆர்.ஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அபிநந்தனின் குடும்பத்தினர் நேற்று அவரை நேரில் சந்தித்தனர். மேலும், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இரண்டு விமானப்படை அதிகாரிகளும் நேரில் சந்தித்துள்ளனர். 

தான் பாகிஸ்தானில் இருந்தபோது நடந்த அனைத்து நிகழ்வுகளையும் அவர்களிடம் விளக்கிய அபிநந்தன், ``பாகிஸ்தான் ராணுவத்தினர் தன்னை மனரீதியாகத் துன்புறுத்தியதாகவும், உடல் ரீதியாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை" எனத் தெரிவித்ததாக தகவல் வெளியானது. இதற்கிடையே, 72 மணி நேரம் அபிநந்தன், பாகிஸ்தானில் இருந்ததால் அவரின் உடலில் ஏதேனும் ஊசி செலுத்தப்பட்டுள்ளதா, இந்தியாவை ரகசியமாகக் கண்காணிக்க அபிநந்தனின் உடலில் சிப் வைக்கப்பட்டுள்ளதா போன்ற பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. பாகிஸ்தானில் இருந்தபோது அவர் மன அழுத்தத்துக்கு உள்ளானதால் அதைக் கட்டுப்படுத்த கூலிங் டவுன் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 

அபிநந்தன்

இந்த நிலையில், அபிநந்தனுக்கு கீழ்தண்டுவடப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது என ஸ்கேன் செய்ததில் உறுதி செய்யப்பட்டுள்ளது என ANI நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மிக் 21 விமானத்திலிருந்து வெளியேறியபோது இந்தக் காயம் ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பின்னர் தரையிறங்கியபோது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ள மக்கள் தாக்கியதில் அவரது விலா பகுதியிலும் காயம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அவரது உடலில் சிப் ஏதும் பொருத்தப்படவில்லை என்றும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும் தொடர்ந்து இன்னும் சில நாள்கள் அவருக்குச் சிகிச்சைகள் அளிக்கப்படவுள்ளன. இதனால் மேலும் சில நாள்கள் அவர் மருத்துவமனையில் இருக்க வேண்டிய சூழ்நிலை வரும் எனத் தெரிகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close