`110 கோடி கொடுக்கத் தயார்; பிரதமரைப் பார்க்கணும்!' - வீரர்களின் குடும்பங்களுக்குக் கைகொடுக்கும் ஆராய்ச்சியாளர் | Mumbai Based researcher Offers Rs 110 Cr To PM Relief Fund For Pulwama Martyrs

வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (04/03/2019)

கடைசி தொடர்பு:15:40 (04/03/2019)

`110 கோடி கொடுக்கத் தயார்; பிரதமரைப் பார்க்கணும்!' - வீரர்களின் குடும்பங்களுக்குக் கைகொடுக்கும் ஆராய்ச்சியாளர்

புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ.110 கோடி நிவாரணம் கொடுக்க முன்வந்துள்ளார், மும்பையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்.

புல்வாமா தாக்குதல்

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியைச் சேர்ந்தவ,ர் முர்தாசா ஹமீது. பார்வைக் குறைபாடு உள்ள இவர், ராஜஸ்தான் மாநிலம் அரசு வர்த்தகக் கல்லூரியில் பட்டம் பெற்றவர். 44 வயதாகும் இவர், தற்போது மும்பையில் ஆராய்ச்சியாளராக இருக்கிறார். இவர்தான் புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ.110 கோடி நிவாரணம் கொடுக்க முன்வந்துள்ளார். தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு இந்தத் தொகையை வழங்க விரும்பும் அவர், இதற்காக பிரதமர் மோடியைச் சந்தித்து இந்த நிதியைக் கொடுக்க விரும்பியுள்ளார். இதுதொடர்பாக இ-மெயில் மூலம் மத்திய அரசுக்கு இதனைத் தெரிவித்துள்ளார். 

ஆராய்ச்சியாளர் முர்தாசா

மேலும், இதுதொடர்பாக தேசியப் பேரிடர் நிவாரண நிதி செயலாளர் அக்னி குமார் தாஸிடமும் போன் மூலம் பேசியுள்ளார். இது தொடர்பான தகவல்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளவே, இப்போது அதை இ-மெயில் பண்ணியுள்ளார். இதுகுறித்து பேசிய முர்தாசா ஹமீது, ``நம் மண்ணில் மடிந்த ராணுவ வீரர்களுக்கு உதவும் உத்வேகம் குடிமகன்கள் அனைவருக்கும் உள்ளது" எனக் கூறியுள்ளார். வணிகம் படித்துள்ள இவருக்கு, புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்வதில் ஆர்வம். அந்த வகையில், ‘Fuel Burn Radiation Technology’ என்ற தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளதாகக் கூறும் இவர், அரசாங்கம் தனது அறிவியல் கண்டுபிடிப்பை சரியான நேரத்தில் அங்கீகரித்திருந்தால், புல்வாமா போன்ற சம்பவம் தவிர்க்கப்பட்டிருக்கும் என்று வருந்துகிறார்.

இ-மெயில் 

மேலும், இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு வாகனத்தையோ அல்லது ஒரு பொருளையோ, கேமரா, ஜிபிஎஸ் உள்ளிட்ட எந்த வசதியும் இல்லாமல் கண்காணிக்க முடியும். 2016-ம் ஆண்டே இந்தத் தொழில்நுட்பத்தை நெடுஞ்சாலைத் துறைக்கு இலவசமாக வழங்குவதாக அறிவித்தும், 2018-ம் ஆண்டுதான் அதற்கு ஒப்புதல் கொடுத்துள்ளார்கள். ஆனாலும் அதில் எந்தவித முன்னேற்றமும் இல்லை" எனக் கூறி வருந்துகிறார்.

news credits: timesofindia

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close