`உங்களைக் குறிவைக்கிறது பாகிஸ்தான்!'- எஃப் 16 பற்றி அம்பலப்படுத்திய செய்தியாளரை உஷார்படுத்தும் யு.எஸ் | F-16s were used against India, says pakistan journalist

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (04/03/2019)

கடைசி தொடர்பு:18:40 (04/03/2019)

`உங்களைக் குறிவைக்கிறது பாகிஸ்தான்!'- எஃப் 16 பற்றி அம்பலப்படுத்திய செய்தியாளரை உஷார்படுத்தும் யு.எஸ்

ந்தியாவுக்கு எதிராக எஃப் 16 விமானத்தைப் பயன்படுத்தியதுகுறித்து ட்வீட்  வெளியிட்ட செய்தியாளரின் உயிருக்கு பாகிஸ்தான் ராணுவம் குறிவைத்துள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. 

கடந்த பிப்ரவரி 27-ம் தேதி, இந்தியா மீது பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்குதல் நடத்த வந்தன. அவற்றை வானிலேயே மறித்து இந்திய விமானங்கள் விரட்டியடித்தன. மிக்- 21 ரக போர் விமானம் கொண்டு அபிநந்தன் பாகிஸ்தானின் எஃப் 16 ரக விமானத்தை சுட்டு வீழ்த்தினார். எஃப்-16 ரக போர் விமானங்கள், உள்நாட்டு தீவிரவாதத்தை அழிப்பதற்காக பாகிஸ்தானுக்கு அமெரிக்காவால் அளிக்கப்பட்டவை. நவீனமயமான இந்தப் போர் விமானத்தை இந்தியா மீது தாக்க பாகிஸ்தான் பயன்படுத்தியது அம்பலமாகியுள்ளது. எனினும், இந்த ரக விமானங்களைப் பயன்படுத்தவில்லை என்று பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்துவருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளர் தாஹா சித்திக்,  இந்தியாவுக்கு எதிராக எஃப்16 ரக போர் விமானத்தைப் பயன்படுத்தியதை பாகிஸ்தான் விமானப்படையில் உள்ள தனது  சோர்ஸ் உறுதிசெய்துள்ளனர் என்று ட்வீட்  செய்துள்ளார். இவர், நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ், டெலிகிராஃப் போன்ற புகழ்பெற்ற பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதி வருபவர். பாகிஸ்தான் அரசையும் ராணுவத்தின் செயல்பாடுகளையும் தொடர்ந்து விமர்சித்து எழுதுபவர். 

இந்தியாவுக்குச் சொந்தமான வியான் செய்திச் சேனலின் பாகிஸ்தான் பிரிவு தலைவராக இருந்தபோது, கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இஸ்லாமாபாத்தில் மர்மக்கும்பல் இவர்மீது தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானில் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில், அங்கிருந்து‘ வெளியேறி பிரான்ஸ் நாட்டில் தஞ்சமடைந்தார்.

பால்கோட்டில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் பயிற்சி முகாமின்மீது இந்திய விமானங்கள் தாக்குதல் நடத்தியது உறுதி என்பதுகுறித்து மசூத் அசாரின் சகோதரர்  வெளியிட்ட ஆடியோ க்ளிப்பையும் இவர்தான் வெளியிட்டார். பாகிஸ்தான் ராணுவம், தாஹா சித்திக்கை கொலைசெய்யும் நோக்கத்தில் இருப்பதாக, அமெரிக்க உளவுத்துறை அவரை எச்சரித்துள்ளது. பாகிஸ்தான் தூதரகங்கள் அல்லது பாகிஸ்தான் நாட்டுடன் நெருங்கிய நட்பு  கொண்டுள்ள நாடுகளுக்கு தாஹா சித்திக் பயணம் மேற்கொள்ள வேண்டாமென்று அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close