``300 ஆக்டிவ் செல்போன்கள்” -விமானப்படையின் தாக்குதலுக்கு முன் கிடைத்த சிக்னல் | 300 cellphones where active in that area, says NTRO source

வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (05/03/2019)

கடைசி தொடர்பு:10:00 (05/03/2019)

``300 ஆக்டிவ் செல்போன்கள்” -விமானப்படையின் தாக்குதலுக்கு முன் கிடைத்த சிக்னல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா-வில் சிஆர்பிஎஃப் வீரர்கள்மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில், 40 -க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியாயினர். இந்தத் தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இயங்கி வரும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு பொறுப்பேற்றது. 

புல்வாமா தாக்குதல்

அதன் பின்னர், கடந்த பிப்ரவரி மாதம் 26 -ம் தேதி, இந்திய விமானப்படையின் 12 மிராஜ் 2000 ரக விமானங்கள் மூலம் பாகிஸ்தானில் அதிரடித் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மிகப் பெரிய தீவிரவாத முகாம் அழிக்கப்பட்டதாக இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில், குறைந்தது 250 முதல் 300 தீவிரவாதிகள் பலியானதாகத் தகவல்கள் வந்துகொண்டிருந்தன. 

ஆனால், இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.  ``நாங்கள், திட்டமிட்டு சரியான இலக்கைத் தாக்கினோம். ஆனால், எத்தனை பேர் பலியானார்கள் என்பது தொடர்பான தகவல்களை நாங்கள் சொல்ல முடியாது” என ஏர் சீஃப் மார்ஷல் கோவையில் நேற்று தெரிவித்திருந்தார். 

மிராஜ் ரக விமானம்

தொடர்ந்து, இந்தியாவின் தாக்குதல் தொடர்பாகப் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுவருகிறது.  இந்திய விமானங்கள் பாகிஸ்தானில் இருக்கும் மரங்கள் மீதுதான் தாக்குதல் நடத்தின, யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என பாகிஸ்தான் தெரிவித்தது. இந்தத் தகவல்களால் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல்குறித்து பெரும் கேள்விகள் சமூக வலைதளங்களில் வலம் வந்துகொண்டிருந்தது. ஆனால், ஜெய்ஷ்-இ-முகமது சார்பில் வெளியிடப்பட்ட ஆடியோவில், முகாம் தாக்கப்பட்டது உண்மைதான் எனத் தெரிவித்தது. ஆனால், அந்த அமைப்பும் பலியான தீவிரவாதிகளின் எண்ணிக்கை தொடர்பாகத் தகவல் வெளியிடவில்லை.

செல்போன்

இந்நிலையில், பால்கோட் பகுதியில் இந்தியா தாக்குதல் நடத்தும் முன்பு, குறிப்பிட்ட அந்த முகாம் இருக்கும் பகுதியில் சுமார் 300 செல்போன்கள் ஆக்டிவ்வாக இருந்ததாகத் தேசிய தொழில்நுட்ப ஆய்வு அமைப்பு ( NTRO) தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக செய்தி வெளியிட்டிருக்கும் ஏ.என்.ஐ ஊடகம்,  ``இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தும் முன்பு, அங்கு 300 செல்போன்கள் ஆக்டிவ்வாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர், அந்த இலக்கு தாக்கப்பட்டது எனத்  தேசிய தொழில்நுட்ப ஆய்வு அமைப்பைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்” என்று செய்தி வெளியிட்டுள்ளது. 
 


[X] Close

[X] Close