`இந்த நிலைக்குக் காரணம் என் அம்மாதான்!'- டாக்டர் கனவில் அப்சல் குருவின் மகன் காலிப் உருக்கம் | Proud to own Aadhaar card, want Indian passport next says Afzal Guru’s son

வெளியிடப்பட்ட நேரம்: 12:35 (05/03/2019)

கடைசி தொடர்பு:13:52 (05/03/2019)

`இந்த நிலைக்குக் காரணம் என் அம்மாதான்!'- டாக்டர் கனவில் அப்சல் குருவின் மகன் காலிப் உருக்கம்

தனக்கு ஆதார் கார்டு கிடைத்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவிக்கிறார் அப்சல் குருவின் மகன் காலிப் அப்சல் குரு.

அப்சல் குரு

2001-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி, இந்திய நாடாளுமன்றத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பாதுகாப்புப்படை வீரர்கள் சிலர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய அப்சல் குரு உள்ளிட்டவர்கள், பின்னர் கைதுசெய்யப்பட்டனர். அப்சல் குருவுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. அவருடைய தண்டனையை உச்ச நீதிமன்றமும் உறுதிசெய்தது. இதையடுத்து, 2013-ம் ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி, திகார் சிறையில் அப்சல் குருவுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது. உடல் அங்கேயே தகனம் செய்யப்பட்டது. அப்சல் குரு கைதானபோது, அவர் மகன் காலிப்புக்கு 2 வயது. காலிப், காஷ்மீர் மாநில கல்வித்திட்டத்தின் கீழ் பயின்றுவந்தார். கடந்த ஆண்டு 12-ம் வகுப்புத் தேர்வு எழுதிய அவர் 500-க்கும் 441 மதிப்பெண்கள் பெற்று தேர்வாகியுள்ளார். 

டாக்டர் ஆக வேண்டும் என்ற ஆசையில் படித்து வருகிறார் காலிப். தற்போது காஷ்மீரின் பாராமுல்லா பகுதியில் தன் தாயுடன் வசித்து வரும் காலிப் தான் இந்தியர் என்பதற்கு அடையாளமாக ஆதார் கார்டு கிடைத்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்து பேட்டியில் கூறுகையில், ``தனக்கு இந்த ஆதார் அட்டை கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. இன்னும் எனக்கு பாஸ்போர்ட் மட்டும் கிடைத்துவிட்டால் இன்னும் மகிழ்ச்சி கொள்வேன்" என்னும் அவர் தற்போது டாக்டர் ஆகும் முயற்சியில் வரும் மே மாதம் நடைபெறவுள்ள நீட் தேர்வுக்குப் பயிற்சி எடுத்து வருகிறார். 

தாயுடன் காலிப்

``மருத்துவர் ஆக வேண்டும் என்பது என் தந்தையின் கனவு. இதனால்தான் பயிற்சி எடுத்து வருகிறேன். ஒருவேளை நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் துருக்கியில் உள்ள கல்லூரியில் ஸ்காலர்ஷிப்புடன் படிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. அதற்காகவே பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்துள்ளேன். பழைய தவறுகளில் இருந்து நாங்கள் நிறையவே பாடம் கற்றுள்ளோம். என் தந்தையால் மருத்துவ கனவை நிறைவேற்ற முடியவில்லை. அதனால்தான் நான் மருத்துவம் படிக்க உள்ளேன்" எனக் கூறியவர், தந்தையின் தூக்குக்குப் பின் மக்களின் பேச்சுகளை எப்படித் தவிர்த்தீர்கள் என்ற கேள்விக்கு, ``என் தற்போதைய நிலைக்குக் காரணம் என் அம்மாதான். நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதில் இருந்தே எனக்கென தனிமையான இடத்தை உருவாக்கி என்னைக் கவனித்து வந்தார். 

காலிப்

அதனால்தான் இந்த அளவுக்கு என்னால் படிக்க முடிந்தது. எனது அம்மா எப்போது சொல்வார், ``யார் என்ன சொன்னாலும் எந்த ஒரு எதிர்வினையும் ஆற்றக்கூடாது" என்று. அதன்படி, என்னுடைய முன்னுரிமை எப்போதும் அம்மாவுக்கே. மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றி கவலையில்லை. என்னுடைய வீட்டுக்குச் சிறிது மீட்டர் தூரத்தில்தான் ராணுவ வீரர்களின் கேம்ப் இருக்கிறது. சில சமயம் அவர்களை நான் சந்திக்க வேண்டிய சூழ்நிலை வரும். ஆனால், அவர்களிடத்தில் இருந்து எந்த ஒரு எதிர்ப்பும் இதுவரை வந்ததில்லை. என்னைப் பார்க்கும்போதெல்லாம் நான் டாக்டராக வேண்டும் என உற்சாகப்படுத்துவார்கள். என்னையோ எங்கள் குடும்பத்தையோ அவர்கள் துன்புறுத்துவதில்லை" எனக் கூறினார். 

news credits: timesofindia

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close