உலகிலேயே காற்று மாசுபாட்டில் நம்பர் ஒன் தலைநகரம் டெல்லி! | Delhi Most Polluted Capital in World,

வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (05/03/2019)

கடைசி தொடர்பு:17:10 (05/03/2019)

உலகிலேயே காற்று மாசுபாட்டில் நம்பர் ஒன் தலைநகரம் டெல்லி!

புது டெல்லி

காற்று மாசுபாடு

உலகிலேயே மிக அதிகமான காற்று மாசுபாடு உடைய தலைநகரமாக நமது தலைநகர் டெல்லி முதல் இடத்தில் உள்ளது. ஆனால், காற்று மாசுபாடு உடைய நகரங்களின் தரவரிசையில் குருக்ரம் (Gurugram) நகரமானது முதல் இடத்தில் உள்ளது. இந்த நகரமும் டெல்லிக்கு அருகில்தான் உள்ளது. இதைவிட மிகப்பெரிய அதிர்ச்சி என்னவென்றால் உலகில் மோசமான காற்று மாசுபாடுடைய நகரங்களின் தரவரிசையில் முதல் பத்து நகரங்களில் ஏழு நகரங்கள் இந்தியாவைச் சேர்ந்தவை. டெல்லிக்கு அருகில் உள்ள நகரங்களே பெரும்பாலும் இந்தப் பட்டியலில் இருக்கின்றன. உலகில் காற்று மாசுபாட்டைப் பொறுத்தவரை தெற்காசிய நகரங்களே அதிகம் பாதிக்கப்பட்டவையாக இருக்கின்றன.

முதல் இருபது இடங்களில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த நகரங்களே உள்ளன. இந்த தரவரிசை மற்றும் அறிக்கையானது சுற்றுச்சூழல் செயல்பாட்டு அமைப்பான கீரின்பீஸ் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையானது கடந்த ஆண்டு அளவிடப்பட்ட காற்றுத் தரத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. காற்றின் தரத்தை அளவிட தொடர்ந்து பொது கண்காணிப்பு ஆதாரங்கள், அரசு கண்காணிப்பு ஆதாரங்கள் மற்றும் தனிநபர் அல்லது நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வு ஆதாரங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு ஆய்வு செய்து காற்றின் தரம் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அதிகம் காற்று மாசுபாடுடைய தலைநகரங்களின் பட்டியலில் வங்கதேசத்தின் தலைநகரான டாக்கா (Dhaka) இரண்டாம் இடத்திலும் ஆப்கானிஸ்தானின் காபூல் (Kabhul) மூன்றாம் இடத்திலும் உள்ளன. தலைநகரங்களின் பட்டியலைத் தவிர்த்து நகரங்களின் பட்டியலில் டெல்லிக்கு 11 வது இடம். டெல்லிக்கு அருகில் உள்ள காசியபாத் (Ghaziabad) இரண்டாவது இடத்திலும் பாகிஸ்தானின் ஃபைசலாபாத் (Faisalabad) மூன்றாம் இடத்திலும் உள்ளது. தரவரிசையில் முதல் நகரமான குருக்ரம் நகரில் 134 மைக்ரோகிராம் அளவுக்கு காற்று மாசுபாடு உள்ளது. தொழிற்புரட்சியினால் உலகின் முதன்மையான உற்பத்தி நாடாக இருந்த சீனாவிலும் காற்று மாசுபாடு அதிகமாக இருந்தது. சீனாவின் மேகங்கள் எப்போதும் புகை படிந்தே இருக்கும் என அறிக்கையில் சொல்லப்பட்டாலும் காற்று மாசுபாட்டைக் குறைப்பதில் நன்றாக முன்னேறியுள்ளனர். காற்று மாசுபாடு அதிகம் இருந்த பெய்ஜிங் நகரம் 122வது இடத்தில் உள்ளது. ஒரு வருடத்தில் 2017 - 2018 க்குள் காற்று மாசுபாட்டில் 12% குறைத்துள்ளனர். முதல் 20 நகரங்களில் ஹொட்டான், காஷ்கர் என இரு சீன நகரங்கள் மட்டுமே உள்ளன. மேலும் அறிக்கையின்படி அடுத்த ஆண்டிற்குள்  காற்று மாசுபாட்டின் காரணமாக 70 லட்சம் மக்கள் வரை இறக்கலாம். இதனால் 225 பில்லியன் டாலர்கள் வரை சரிவு ஏற்படலாம் எனவும் கூறப்படுகிறது. 

 


[X] Close

[X] Close