இதுதான் அந்த `ஸ்மார்ட் பாம்'... வச்சக்குறி தப்பாது... எப்படி? | Know all about the israel made smart bomb Indian Air Force used for Balakot airstrike

வெளியிடப்பட்ட நேரம்: 12:05 (06/03/2019)

கடைசி தொடர்பு:12:17 (06/03/2019)

இதுதான் அந்த `ஸ்மார்ட் பாம்'... வச்சக்குறி தப்பாது... எப்படி?

பாகிஸ்தானில் உள்ள பாலகோட் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் பயிற்சி முகாமின் மீது இந்திய விமானப்படை விமானங்கள் கடந்த 26- ம் தேதி தாக்குதல் நடத்தின. சரியாக இலக்கைக் குறி வைத்து வெடிகுண்டுகள் வீசப்பட்டதா, பயங்கரவாதிகள் எத்தனை பேர் இறந்தனர் என்பதில் இன்னும் சந்தேகம் நிலவுகிறது. அதே வேளையில், இந்திய விமானப்படை இலக்கைத் துல்லியமாக தாக்கியதாகச் சொல்கிறது. இந்திய விமானப்படை.  இஸ்ரேல் நாட்டு தொழில்நுட்பத்தில் வீசப்பட்ட SPICE-2000 '(Smart, Precise-Impact and Cost-Effective ) ரக வெடிகுண்டு அது. இலக்கைத் துல்லியமாக தகர்க்கும் ஸ்மார்ட் பாம் ரகத்தைச் சேர்ந்தவை என்கிறது. இந்த ஸ்மார்ட் பாம் எப்படி இயங்கும் இலக்கை எப்படி துல்லியமாகத் தாக்கும் என்று பார்க்கலாம். 

பாலகோட் மீது வீசப்பட்ட ஸ்மார்ட் பாம்

இஸ்ரேல் நிறுவனமான ரேஃபியால் இந்த ஸ்மார்ட்பாம்களை தயாரிக்கிறது. அதாவது, வெடிகுண்டுடன் SPICE-2000 இணைக்கப்பட்டு விடும். வெடிகுண்டை இலக்கை நோக்கிச் செலுத்துவதுதான் SPICE-2000  தொழில்நுட்பம். பாலகோட் முகாம் மீது வீசப்பட்ட வெடிகுண்டுகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவைதான். ஆனால், அவை SPICE-2000 தொழில்நுட்பத்தில் வீசப்பட்டது. அதன்படி, வெடிகுண்டு முன்பகுதியில் கேமரா பொருத்தப்பட்டிருக்கும். அடுத்த பகுதி வெடிகுண்டுவின் பின்புறம் பொருத்தப்படும். பிறகு, இலக்கு எங்கே உள்ளது, இலக்கு அமைந்துள்ள பகுதி, அதன் செயற்கைக் கோள் படம் ,  கட்டடத்தின் நிறம் போன்ற தகவல்கள் சிப் ஒன்றில் பதிவேற்றப்பட்டு வெடிகுண்டுடன் இணைக்கப்பட்டு விடும். ஜி.பி.எஸ் வசதியும் உண்டு. 

பாலகோட் மீது வீசப்பட்ட ஸ்மார்ட் பாம்

போர் விமானம் இலக்கைத் தாக்கும் நிலையை எட்டியதும் ஸ்மார்ட் பாம் விமானத்திலிருந்து விடுவிக்கப்படும். விமானி விமானத்தில் இருந்தவரே வெடிகுண்டுவின் செயல்பாட்டைக் கண்காணிக்க முடியும். வெடிகுண்டு முகப்பில் பொருத்தப்பட்டுள்ள கேமரா அதற்கு முன் உள்ள எல்லாவற்றையும் புகைப்படம் எடுத்துக்கொண்டே இருக்கும். சிப்பில் உள்ள புகைப்படங்களுடன் அவை கிராஸ் செக் செய்யப்படும். உதாரணமாக வெடிகுண்டு முன்னால் சிவப்பு நிற பில்டிங் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். ஆனால், சிப்பில் உள்ள தகவல் பச்சை நிற கட்டடம் என்று பதிவேற்றப்பட்டிருந்தால், இலக்கை மாற்றிக்கொண்டு, பச்சை நிற கட்டடத்தை நோக்கி வெடிகுண்டு பறக்கத் தொடங்கும். இதைத் தனிப்பட்ட கட்சி அறியும் முறை என்று இஸ்ரேலின் ரேஃபியல் நிறுவனம் சொல்கிறது.

சுருங்கச் சொல்லப் போனால் ஸ்மார்ட் பாம்கள் போர் விமானியின் பணியை எளிதாக்கி விடுகின்றன. அதனால், இந்திய விமானப்படை ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் பயிற்சி முகாமைத் துல்லியமாக தாக்கியிருக்க வாய்ப்புகள் அதிகம். அதிகபட்சம் விலகினாலும் 3 மீட்டர்தான் விலக வாய்ப்பாம். அப்படியென்றால் வீட்டுக்கும் முற்றத்துக்கும் உள்ள இடைவெளிதான். ஜெய்ஷ் முகாம் மீது வைக்கும் குறி தப்பி விடக்கூடாது என்பதற்காக பாலக்கோட் தாக்குதலுக்கு இந்த ஸ்மார்ட் பாம்களை இந்திய விமானப்படை தேர்வு செய்ததாகச் சொல்லப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close