இந்தியா தாக்கிய ஜெய்ஷ் முகாம் இயங்குவதாக ராய்ட்டர்ஸ் புகைப்படம் வெளியீடு! | images show madrasa buildings still standing at scene of Indian bombing

வெளியிடப்பட்ட நேரம்: 17:46 (06/03/2019)

கடைசி தொடர்பு:20:38 (06/03/2019)

இந்தியா தாக்கிய ஜெய்ஷ் முகாம் இயங்குவதாக ராய்ட்டர்ஸ் புகைப்படம் வெளியீடு!

ந்திய விமானப்படை விமானங்கள் பாலக்கோட்டில் உள்ள ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் பயிற்சி மையத்தின் மீது துல்லியத் தாக்குதல் நடத்தின. தீவிரவாதிகள் ஏராளமானோர் உயிரிழந்ததாகச் சொல்லப்பட்டது. தாக்குதல் நடத்தப்பட்டு 6 நாள்களுக்குப் பிறகு இந்தியா தாக்கியதாகக் கூறிய ஜெய்ஷ் இ முகமது அமைப்புக்குச் சொந்தமான மதராஸாவின் செயற்கைக்கோள் வழியாக புகைப்படத்தை ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்திய விமானப்படைகள் இந்தக் கட்டடத்தை தாக்கத்தான் சென்றன. இந்தப் புகைப்படம் அமெரிக்காவைச் சேர்ந்த பிளான்ட் லேப்ஸ் என்ற நிறுவனத்தால் எடுக்கப்பட்டது. 

பாகிஸ்தானில் இயங்கும் ஜெய்ஷ் முகாம்

செயற்கைக் கோள் வழியாக எடுக்கப்படும் புகைப்படங்களை ஆய்வு செய்வதில் நிபுணத்துவம் பெற்ற ஜெஃப்ரி லிவீஸ் என்பவர் ``இந்தப் புகைப்படத்தைப் பார்க்கும் போது கட்டடங்கள் சேதமடைந்ததாகத் தெரியவில்லை'' என்று கூறுகிறார். உள்நாட்டு அரசியல் லாபத்திற்காக இந்திய விமானப்படை தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டதா என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், இந்தப் புகைப்படத்தால்  சர்ச்சை வெடிக்கும் என்று கருதப்படுகிறது. 

இந்திய விமானப்படையோ பாலக்கோட்டில் வீசப்பட்ட குண்டுகளில் 80 சதவிகிதம் துல்லியமாக இலக்கைத் தாக்கிவிட்டன என்று அறிவித்துள்ளது. உளவு விமானத்தால் எடுக்கப்பட்ட synthetic aperture radar imagery புகைப்படங்களுடன் 12  பக்க அறிக்கையை மத்திய அரசிடம் அளிக்கப் போவதாக விமானப்படை தெரிவித்துள்ளது. 

பால்கோட்டில் வீசப்பட்ட Spice 2000 ரக குண்டுகள் இஸ்ரேல் நாட்டுத் தயாரிப்பாகும். இவை கேமரா மற்றும் லேசர் உதவியுடன் செயல்படும் வெடிகுண்டுகள். இந்த ரக குண்டுகள் மிகத் துல்லியமாக இலக்கைத் தாக்குபவை. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close