சிறுபான்மையினர் மீதான தாக்குதலால் இந்தியாவுக்குச் சரிவுதான் - ஐ.நா மனித உரிமைகள் தலைவர் மிச்செல் | U.N. rights chief warns India over divisive policies harassment of Muslims

வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (06/03/2019)

கடைசி தொடர்பு:20:40 (06/03/2019)

சிறுபான்மையினர் மீதான தாக்குதலால் இந்தியாவுக்குச் சரிவுதான் - ஐ.நா மனித உரிமைகள் தலைவர் மிச்செல்

``இந்தியாவில், சிறுபான்மையினர், தலித்துகள், ஆதிவாசிகள் ஆகியோர் மீது குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களைப் பற்றியும், புறக்கணிப்பைப் பற்றியும் அதிகமான தகவல்களைப் பெற்றுவருகிறோம். இந்தக் கொடுமைகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதைக் காண்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார் ஐ.நா மனித உரிமைகள் தலைவர் மிச்செல் பேச்லெட்.

                                   மிச்செல்

ஜெனிவாவில் இன்று நடக்கும் ஐ.நா மனித உரிமை சந்திப்பில் பேசிய அதன் தலைவர் மிச்செல் பேச்லெட், பிரிவினைவாத கொள்கைகள் பொருளாதார வளர்ச்சியைக் குறைத்துவிடும் எனவும் ஏற்கெனவே ஒடுக்கப்பட்ட சமூகங்களை இன்னும் ஒடுக்குவதும், ஒதுக்குவதும் மேலும் சரிவையே உண்டாக்கும்” என இந்தியச் சமூகத்தை எச்சரித்திருக்கிறார்.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவின் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் அவர், இரு நாட்டு அதிகாரிகளும் இந்தத் தாக்குதலுக்குக் கிடைக்க வேண்டிய நீதிக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். ``இருநாடுகளுக்கு இடையில் இனியும் ஏற்படுத்தப்படும் பதற்றம், இன்னும் பாதுகாப்பற்றதன்மையை ஏற்படுத்தும். அணு ஆயுதங்களை வைத்திருக்கும் இரு நாடுகளுக்கும் இது நல்லதல்ல” என்று தெரிவித்திருக்கிறார் மிச்செல். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close