வரி ஏய்ப்பு வழக்கில் என்.இ.பி.சி நிறுவன நிர்வாக இயக்குநர் திருப்பதி குமார் கெம்காவுக்கு 5 ஆண்டுகள் சிறை! | NEPC india limited MD convicted in income tax case

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (06/03/2019)

கடைசி தொடர்பு:11:21 (07/03/2019)

வரி ஏய்ப்பு வழக்கில் என்.இ.பி.சி நிறுவன நிர்வாக இயக்குநர் திருப்பதி குமார் கெம்காவுக்கு 5 ஆண்டுகள் சிறை!

என்.இ.பி.சி இந்தியா லிமிடெட்  நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திருப்பதி குமார் கெம்காவிற்கு வரிஏய்ப்பு வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.11 லட்சம் அபராதமும் விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

என்.இ.பி.சி நிர்வாக இயக்குநர் திருப்பதிகுமார் கெம்கா

என்.இ.பி.சி இந்தியா லிமிடெட், நிறுவனம் இந்தியாவில், காற்றாலை தயாரிப்பு, சோலார் தொழில்நுட்பம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் இந்தியாவின் மிக முக்கியமான தொழில் நிறுவனங்களில் ஒன்றாகும். என்.இ.பி.சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திருப்பதி குமார் கெம்கா மீது வருமான வரித்துறை தொடர்ந்த வரிஏய்ப்பு வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை எழும்பூர் பொருளாதாரக் குற்றப் பிரிவு நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி மலர்மதி, திருப்பதி குமார் கெம்காவுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.11 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

திருப்பதிகுமார் கெம்கா

இதைத் தொடர்ந்து அவரை போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர். வழக்கின் தீர்ப்பு வாசிக்கப்பட இரவு 8 மணி ஆனது, பொதுவாக நீதிமன்றங்கள் 5 மணிக்கே நிறைவுபெறும் நிலையில், இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி இரவு 8 மணி வரை வழக்கு விசாரணை நடைபெற்றது. நீதிமன்ற வளாகத்தில், அவரது மனைவி உட்பட அவரது உறவினர்கள் காத்திருந்தனர். தனி அறையில் அமரவைக்கப்பட்டிருந்த திருப்பதிகுமார் கெம்கா, வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டதும், போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் வருவது முன்கூட்டியே அறிவிக்கப்பட்டதும், நீதிமன்ற ஊழியர் ஒருவர், நீதிமன்ற வளாகத்தின் வெளிப்புறத்தில் உள்ள அனைத்து விளக்குகளையும் அணைத்தார். பின்னர் மிக ரகசியமாக திருப்பதி குமார் கெம்காவை போலீஸார் அழைத்துச் சென்றனர்.


[X] Close

[X] Close