`ரஃபேல் ஆவணங்களை திருடினோமா?’ - `இந்து’ ராம் விளக்கம் | Rafale deal, centre Govt will use Official Secrets Act against two publications

வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (07/03/2019)

கடைசி தொடர்பு:11:51 (07/03/2019)

`ரஃபேல் ஆவணங்களை திருடினோமா?’ - `இந்து’ ராம் விளக்கம்

ஃபேல் போர் விமானம் தொடர்பான ஆவணங்களைப் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தில் இருந்து இந்து மற்றும் ஏ.என்.ஐ நிறுவனம் திருடியதாக மத்திய அரசு வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார்.

ரஃபேல் போர் விமானம்

பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் நிறுவனத்திடம் இருந்து ரஃபேல் விமானங்கள் வாங்க மேற்கொண்ட ஒப்பந்தத்தில் முறைகேடுகள் எழுந்ததாகப் புகார் எழுந்தது. டஸால்ட் நிறுவனத்தின் இந்திய பங்குதாரராக அனில் அம்பானியின் நிறுவனம் சேர்க்கப்பட்டிருந்தது. ரூ.30, 000 கோடி அளவுக்கு முறைகேடு எழுந்ததாகச் சொல்லப்பட்டது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து ரஃபேல் போர் விமானம் தொடர்பான ஆவணங்களைக்  காணவில்லை என்று மத்திய அரசின் வழக்கறிஞர் அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் கூறினார்.  

நீதிபதிகளிடம் அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் கூறுகையில், ` ரஃபேல் தொடர்பான முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன. அந்த ஆவணங்களை மையமாக வைத்து ஆங்கிலப்பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. திருடப்பட்ட ஆவணங்கள் `ரகசியம்' என்று குறிக்கப்பட்டவை. அதனடிப்படையில் செய்தி வெளியிடுவது அரசு ரகசியங்களை வெளியிடுவது '' என்றார். நேற்றைய வழக்கு விசாரணையின்போது அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் முதலில் திருடியதாக சொல்லப்பட்ட  நிறுவனங்களின் பெயர்களை குறிப்பிடவில்லை. ஒரு கட்டத்தில் இந்து பத்திரிகை மற்றும் ஏ.என்.ஐ நிறுவனத்தின் பெயர் குறிப்பிட்டுப் பேசினார். ரஃபேல் தொடர்பான ஆவணங்கள் இந்த நிறுவனங்களின் வசம் இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். 

ரஃபேல் தொடர்பாக கட்டுரை எழுதிய இந்து ஆசிரியர் ராம்.

சமீபத்தில் இந்து ஆங்கிலப் பத்திரிகையில் ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடுகள் பற்றி விரிவான கட்டுரை எழுதப்பட்டிருந்தது. இந்தக் கட்டுரையின் அடிப்படையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து பிரதமர் மோடியிடம் கேள்விகள் எழுப்பியது குறிப்பிடத்தக்கது. இந்து மற்றும் ஏ.என்.ஐ. நிறுவனங்கள் மீது அரசு ரகசியங்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. 

இந்து குழுமத் தலைவர் என்.ராம் கூறுகையில், ``பாதுகாப்புத்துறை அமைச்சகத்திலிருந்து எந்த ரகசிய ஆவணங்களையும் நாங்கள் திருடவில்லை. நம்பகத்தனமான சோர்ஸ் வழியாகத் தகவல்களைப் பெற்றோம். எங்கள் சோர்ஸ்களைப் பாதுகாக்கும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது’’ என்று மறுத்துள்ளார். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close