ஜம்மு பேருந்து நிலையத்தில் குண்டுவெடிப்பு!- ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் காயம் | Blast at Jammu bus stand and Injured admitted to hospital

வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (07/03/2019)

கடைசி தொடர்பு:13:00 (07/03/2019)

ஜம்மு பேருந்து நிலையத்தில் குண்டுவெடிப்பு!- ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் காயம்

ஜம்மு - காஷ்மீர் பேருந்து நிலையத்தில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குண்டுவெடிப்பு

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14-ம் தேதி ராணுவ வாகனம் மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 44 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 350 கிலோ வெடிபொருள்களை ஏற்றிக்கொண்டு எதிரே வந்த கார், சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் வந்த பேருந்தின்மீது மோதியது. ஜெய்ஷ்-இ-முகமது என்ற அமைப்பைச் சேர்ந்த ஆதில் அகமது தார் என்ற நபர், 350 கிலோ எடையுள்ள வெடிகுண்டுகளை மறைத்துவைத்து, ராணுவ வாகனத்தின்மீது கொடூரத் தாக்குதல் நடத்தினார்.

குண்டுவெடிப்பு

இதைத் தொடர்ந்தும் புல்வாமா உள்ளிட்ட காஷ்மீரின் சில பகுதிகளில் அவ்வப்போது தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இன்று காலைகூட துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதி ஒருவன் கொல்லப்பட்டான். இந்த நிலையில், சிறிது நேரத்துக்கு முன்பு ஜம்மு பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு ஒன்று வெடித்துள்ளது. ஜம்மு பேருந்து நிலையத்தில் டெல்லி செல்வதற்காக நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் இந்தக் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் பேருந்து நிலையத்தில் இருந்த ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

குண்டுவெடிப்பு

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பஸ் கண்ணாடி உடைந்து சிதறியுள்ளது. வெடித்தது சிறிய வெடிகுண்டு என்பதால் பெரிய அளவில் சேதம் இல்லை எனக் கூறப்படுகிறது. இருப்பினும் சம்பவம் குறித்து ஜம்மு போலீஸார் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close