`சிரித்துக்கொண்டே சாகப்போறேன்னு சொன்னார்' - தேர்வில் நடந்த அவமானத்தால் மாணவி எடுத்த விபரீத முடிவு | Tribal girl commits suicide after allegedly strip-searched during exams at Chhattisgarh

வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (08/03/2019)

கடைசி தொடர்பு:09:30 (08/03/2019)

`சிரித்துக்கொண்டே சாகப்போறேன்னு சொன்னார்' - தேர்வில் நடந்த அவமானத்தால் மாணவி எடுத்த விபரீத முடிவு

பள்ளியில் நடந்த அவமானத்தால் 10 -ம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவி

சத்தீஸ்கர் மாநிலம் ஜாஷ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின மாணவி ஒருவர் அங்குள்ள பள்ளியில் 10 -ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அங்கு 10 -ம் வகுப்பு தேர்வுகள் சமீபத்தில்தான் தொடங்கியுள்ளது. அதன்படி கடந்த மார்ச் 1 -ம் தேதி தேர்வு எழுதச் சென்றுள்ளார் அந்த மாணவி. அவர் தேர்வு எழுதிக்கொண்டிருக்கும்போது அங்கு வந்த சிறப்பு அதிகாரிகள் அவரிடம் பிட் இருப்பதாகச் சந்தேகப்பட்டுள்ளனர். உடனே சோதனை நடத்துவதற்காக அவரைத் தனி அறைக்கு அழைத்துச் சென்ற அதிகாரிகள் அங்கு அவரின் ஆடைகளைக் களையச் சொல்லி சோதனை நடத்தியுள்ளனர். ஆனால், சோதனையில் பிட் ஏதும் அவரிடம் இல்லை. இதன்பிறகு அவரைத் தேர்வு எழுதச் சொல்லியுள்ளனர் அதிகாரிகள். ஆனால், மாணவி வீட்டுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. 

வீட்டுக்குச் சென்றவர் அமைதியாகவே இருந்துள்ளார். இரண்டு நாள்கள் கழித்து அவரை வீட்டில் காணவில்லை. தேடிப் பார்க்கும் போது மாணவி கிராமத்தின் அருகில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கியபடி இறந்துகிடந்துள்ளார். தேர்வின் போது நடந்த அவமானங்களை நினைத்தபடியே மாணவி இருந்துள்ளார். அதனால் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து அறிந்த பெற்றோர்கள், சக மாணவர்கள் கதறி அழுதனர். 

தற்கொலை

இதுகுறித்து கூறும் மாணவியின் சகோதரர், ``நான் எக்ஸாம் எப்படி இருந்தது எனக் கேட்டதற்கு அதிகாரிகள் சோதனையால் சரியாகத் தேர்வு எழுதவில்லை என்றார். அதிகாரிகள் தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை நடத்தியதாகத் தெரிவித்தார். இதைச் சொல்லும்போதே சிரித்துக்கொண்டே நான் சாகப்போகிறேன் என்றார். ஆனால் அதை நான் அப்போது பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அடுத்த பரீட்சைக்கு நன்றாகப் படி என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டேன்" என்றார். 

அதிகாரிகளின் நடவடிக்கை காரணமாக மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகளின் இத்தகைய நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்த மாவட்ட கலெக்டர் ரவி மிட்டல், ``சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்தப்படும். மாணவர்கள் இதைப்பற்றி கவலை கொள்ள வேண்டாம்" எனக் கூறியுள்ளார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close