கடன் சுமையில் தத்தளித்த அனில் அம்பானிக்கு ரூ.648 கோடிக்கு கிடைத்த ஒப்பந்தம்! | Anil Ambani got new project

வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (08/03/2019)

கடைசி தொடர்பு:15:10 (08/03/2019)

கடன் சுமையில் தத்தளித்த அனில் அம்பானிக்கு ரூ.648 கோடிக்கு கிடைத்த ஒப்பந்தம்!

கடன் சுமையில் தத்தளித்த அனில் அம்பானிக்கு ரூ.648 கோடிக்கு கிடைத்த ஒப்பந்தம்!

அம்பானி சகோதரர்களுள் ஒருவரான அனில் அம்பானி பல்வேறு கடன் சுமைகளில் சிக்கி தன்னுடைய சொத்துகளை விற்கும் நிலைக்கு வந்துவிட்டார். அவருடைய நிறுவனங்களுள் ஒன்றான, ஆர்.கம்யூனிகேஷன் நிறுவனத்துக்கு ரூ.975 கோடி கடன் இருந்துகொண்டிருக்கிறது.

அனில் அம்பானி

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் கூட கடந்த மாதம் தன்னுடைய சேவையை முற்றிலும் நிறுத்திக்கொண்டது. இத்தகையச் சூழலில் குஜராத்தில் புதிய விமான நிலையத்தைக் கட்ட ஒப்பந்தக்காரர்களுக்குள் நடந்த போட்டியில் ஒன்பது பெரிய நிறுவனங்கள் கலந்துகொண்டன. அவர்களுள் அனில் அம்பானிக்குக்கு விமான நிலையம் கட்டுவதற்கான ஒப்பந்தம் கிடைத்திருக்கிறது. எல் அன்ட் டி, ஆஃகான் போன்ற பெருநிறுவனங்கள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில் கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் அனில் அம்பானிக்கு ஒப்பந்தம் கிடைத்ததற்குப் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.

அனில் அம்பானி

சுமார் ரூ.648 கோடி ரூபாய்க்கான இந்த ஒப்பந்தம் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃப்ராசக்ட்சர் என்கிற நிறுவனத்தின் வழியாக அவர் நடைமுறைப்படுத்த இருக்கிறார். ஒப்பந்தம் கையெழுத்தான முப்பது மாதங்களுக்குள் விமான நிலையம் கட்டி முடித்துத் தருமாறு திட்டம் போட்டிருக்கிறார்கள்.  


[X] Close

[X] Close