மிக்-21 போர் விமானம் விபத்துக்குள்ளானது; விமானி உயிர் தப்பினார்! | MIG fighter jet crashes near Bikaner in Rajastan; Pilot ejected safely

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (08/03/2019)

கடைசி தொடர்பு:18:21 (08/03/2019)

மிக்-21 போர் விமானம் விபத்துக்குள்ளானது; விமானி உயிர் தப்பினார்!

ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான மிக்-21 ரக போர் விமானம் விபத்துக்குள்ளாகி நொறுங்கியது. அதில் இருந்த விமானி வெளியே குதித்து உயிர் தப்பினார்.

 

மிக் 21 விமானம்

வழக்கமான பயிற்சியில் மிக்-21 விமானம் ஈடுபட்டபோது, அந்த விமானத்தின் மீது பறவை மோதியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பிகானர் அருகேயுள்ள நால் என்ற இடத்தில் இருந்து அந்த விமானம் புறப்பட்டதாகவும், அதில் ஆயுதங்கள் ஏதும் இல்லை என்றும் பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்தன. விமானம் விழுவதை அறிந்த விமானி, அதிலிருந்து பாரசூட் மூலம் கீழே குதித்து உயிர் தப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்றாலும் இந்த விபத்து குறித்து முறைப்படியான விசாரணை நடத்த விமானப்படை உத்தரவிட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close