`ரஃபேல் ஆவணங்கள் திருடப்படவில்லை; நகல் எடுக்கப்பட்டிருக்கின்றன!’ - மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் | Rafale documents not stolen, say AG KK Venugopal

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (09/03/2019)

கடைசி தொடர்பு:07:00 (09/03/2019)

`ரஃபேல் ஆவணங்கள் திருடப்படவில்லை; நகல் எடுக்கப்பட்டிருக்கின்றன!’ - மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர்

பாதுகாப்புத் துறை அமைச்சகத்தில் இருந்து ரஃபேல் விமான ஒப்பந்த ஆவணங்கள் திருடப்படவில்லை என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் தெரிவித்திருக்கிறார். 

ரஃபேல் ஆவணங்கள் திருடப்படவில்லை - மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால்

ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உள்ளிட்டோர் முறையிட்டனர். இந்த வழக்கு விசாரணையின் போது வாதாடிய மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், மத்திய அரசு ரகசியமாக வைத்திருந்த ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை மனுதாரர்கள் திருடியிருக்கிறார்கள் என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். 

ரஃபேல் விவகாரம்  தொடர்பாக நிர்மலா சீதாராமன் ட்வீட்

அவரது இந்த வாதம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாதுகாப்பு வளைத்தில் இருக்கும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தில் இருந்து அரசின் ரகசிய ஆவணங்கள் திருடு போயிருக்கும் என்று கூறப்படுவதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கும் என்றும், இதுகுறித்து உரிய விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. 

ரஃபேல் விவகாரத்தில் நிர்மலா சீதாராமன் ட்வீட்

இந்தநிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்துள்ள மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், பாதுகாப்புத் துறை அலுவலகத்தில் இருந்து ரஃபேல் ஆவணங்கள் திருடப்பட்டது என தாம் கூறியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவதாகத் தெரிகிறது. ஆவணங்கள் திருடப்பட்டது என்பது தவறானது. மனுதாரர்கள் அந்த ஆவணங்களை நகலெடுத்துப் பயன்படுத்தியிருக்கலாம் என்று கூறியிருக்கிறார். இந்த விவகாரம் ரஃபேல் வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ரஃபேல் விவகாரம் தொடர்பாக செய்தி வெளியிட்ட `தி இந்து’ ஆங்கில நாளிதழ் மீது வழக்கு தொடரப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் பேட்டியைக் குறிப்பிட்டு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ட்விட்டரில் பதிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.  


[X] Close

[X] Close