இம்ரான் கான் அரசியல் நிபுணர் என்றால் மசூத் அசாரை ஒப்படைக்கட்டும்- சுஷ்மா ஸ்வராஜ் | Talks and terror cannot go together - Sushma swaraj

வெளியிடப்பட்ட நேரம்: 12:35 (14/03/2019)

கடைசி தொடர்பு:12:35 (14/03/2019)

இம்ரான் கான் அரசியல் நிபுணர் என்றால் மசூத் அசாரை ஒப்படைக்கட்டும்- சுஷ்மா ஸ்வராஜ்

``பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தையும், அந்நாட்டில் பயங்கரவாதம் தொடர்வதும் ஒரே நேரத்தில் நடைபெற முடியாது; தங்கள் மண்ணிலிருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராகப் பாகிஸ்தான், நடவடிக்கை எடுக்காதவரை அந்த நாட்டுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த இயலாது'' என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

சுஷ்மா ஸ்வராஜ்

இந்தியாவில் மோடி அரசின் வெளியுறவுக் கொள்கை தொடர்பாகப் பேட்டியளித்த சுஷ்மா, `இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவுகளைத் தொடர்ந்து சீர்குலைத்துவரும் ஐ.எஸ்.ஐ மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தினரை அந்நாட்டு அரசு கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்' என்று கூறினார்.

மேலும், `பயங்கரவாதம் பற்றி பேச்சு நடத்த இந்தியா விரும்பவில்லை; அதன்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பேச்சுவார்த்தையும் பயங்கரவாதமும் ஒரே நேரத்தில் இடம்பெற வாய்ப்பில்லை' என்று அவர் குறிப்பிட்டார். பால்கோட்டில் நடத்தப்பட்ட இந்திய விமானப்படைத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் பதிலடித் தாக்குதல் குறித்துக் கேட்டபோது, இந்தியாவைப் பொறுத்தவரை, ஜெய்ஸ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் முகாமைக் குறிவைத்தே இந்தியா தாக்குதல் நடத்தியது என்று அமைச்சர் பதில் அளித்தார்.

ஜெய்ஸ்-இ-முகமது அமைப்புக்கு ஆதரவாக, பாகிஸ்தான் ஏன் இந்தியா மீது தாக்குதல் நடத்தியது என்றால், அந்நாட்டு மண்ணிலிருந்து அந்த அமைப்பு செயல்படுவதுடன், அதுபோன்ற பயங்கரவாத அமைப்புக்குப் பாகிஸ்தான் அரசு நிதியுதவியும் அளிக்கிறது என்று தெரிவித்த சுஷ்மா ஸ்வராஜ், ``பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தன்னை அரசியல் நிபுணர், கொடையாளர் என்று கருதுவாரேயானால், மசூத் அசாரை இந்தியாவிடம் ஒப்படைக்கட்டும்" என்றார்.

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு எடுத்தால் மட்டுமே அந்த நாட்டுடன் இந்தியா நல்லுறவைக் கொண்டிருக்க முடியும் என்றும் சுஷ்மா ஸ்வராஜ் உறுதியாகத் தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close