நன்கொடை வழங்கியது மட்டும் ரூ. 1.45 லட்சம் கோடி... ஆஷிம் பிரேம்ஜி வாழும் கர்ணன்! | Azim Premji has earmarked economic benefits of about 34 per cent of his shares in Wipro,

வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (14/03/2019)

கடைசி தொடர்பு:16:50 (14/03/2019)

நன்கொடை வழங்கியது மட்டும் ரூ. 1.45 லட்சம் கோடி... ஆஷிம் பிரேம்ஜி வாழும் கர்ணன்!

பில்கேட்ஸுக்கு அடுத்தபடியாக உலகின் மிகப் பெரிய புரவலராகியிருக்கிறார், விப்ரோ நிறுவனத்தின் தலைவர் ஆஷிம் பிரேம்ஜி.

பெங்களூருவைச் சேர்ந்த மென்பொருள் நிறுவனமான விப்ரோ, 1945-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம்தான் இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனமாக விளங்குகிறது. உலகம் முழுக்க கிளை பரப்பியுள்ள இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு,  பல லட்சம் கோடி. தற்போது, விப்ரோ நிறுவனத்தின் 34 சதவிகித பங்குகளை அதாவது, கிட்டத்தட்ட ரூ. 52,750 கோடியைத் தன்  அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளார் ஆஷிம் பிரேம்ஜி. இதுவரை, இந்த அறக்கட்டளைக்கு இவர் வழங்கிய நன்கொடை மட்டும்  சுமார் 1.45 லட்சம் கோடி. 

ஆஷிம் பிரேம்ஜி

ஆஷிம் பிரேம்ஜியின் அறக்கட்டளை, ஏழைக் குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது. பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்கும் பாடுபட்டுவருகிறது.  இந்த அறக்கட்டளையில் இருந்து 1,600 பேர் பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். பெங்களூருவில் இந்த அறக்கட்டளை நடத்திவரும் பல்கலையில் 5,000 மாணவ  மாணவிகள் படித்துவருகின்றனர். 400 பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். 

ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானிக்குப் பிறகு இந்தியாவில் இரண்டாவது பெரும்  பணக்காரர், ஆஷிம் பிரேம்ஜி. ஆவார்.  உலக அளவில் இவருக்கு 51- வது இடம். 


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close