`என்னைவிட சீரியல் பார்ப்பதுதான் உனக்கு முக்கியமா?’ - மனைவியைப் பதறவைத்த கணவன் | Husband Attacked his wife With A Chopper For Ignoring Him

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (14/03/2019)

கடைசி தொடர்பு:20:14 (14/03/2019)

`என்னைவிட சீரியல் பார்ப்பதுதான் உனக்கு முக்கியமா?’ - மனைவியைப் பதறவைத்த கணவன்

தன்னைக் கண்டுகொள்ளாமல் `பாகிஸ்தானி டிராமா’ பார்த்த மனைவியைக் கணவன் தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கணவன் - மனைவி

புனேவின் சாலிஸ்பரி பார்க் பகுதியைச் சேர்ந்தவர் ஆசிப் சதர் நயப். இவர் தன்னுடன் பேச மறுத்து, பாகிஸ்தானி டிராமா பார்த்த தன் மனைவியைக் காய்கறி வெட்டும் கத்தியைக் கொண்டு வெட்டியுள்ளார். இதுதொடர்பாக, இவரின் மனைவி சமீபத்தில் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், ``என் மகன் கடந்த திங்கள்கிழமை பால் வாங்குவதற்கு வெளியில் சென்றிருந்தார். அவர் பால் வாங்கி வரும்போது பாக்கெட் உடைந்து பையில் பால் சிந்தியிருந்தது. இதனால் என் மகனை நான் திட்டினேன். இதுதொடர்பாக என் கணவருக்கும் எனக்கும் வாக்குவாதம் நடந்தது. வாக்குவாதம் அதிகமானதால் நான் அவரிடம் பேசுவதைத் தவிர்த்துவிட்டேன்’’ என்றார். 

இதன் பின் நடந்த சம்பவத்தை விவரிக்கும் போலீஸ் அதிகாரிகள், ``சம்பவம் நடந்த அன்று மாலை ஆசிப் வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். ஆசிப் வந்ததும் அவரின் மனைவி அவரைக் கண்டுகொள்ளாமல் பெட்ரூமுக்குள் சென்றுவிட்டார். அங்கேயும் சென்று மனைவியிடம் பேச முயன்றுள்ளார் ஆசிப். ஆனால், அவரின் மனைவி ஆசிப்புடன் பேசுவதைத் தவிர்த்து மொபைலில் `பாகிஸ்தானி டிராமா' என்ற சீரியலைப் பார்த்துள்ளார். தன்னுடன் பேசுவதைவிட சீரியல் பார்ப்பதை மனைவி முக்கியமாகக் கருதியதால் ஆத்திரமடைந்த ஆசிப், அருகில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியால் மனைவியைத் தாக்கியுள்ளார். அவரின் மனைவி கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் ஆசிப் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளோம். விசாரணை நடந்து வருகிறது" என்றனர்.

news credit: indiatimes

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close