'கங்கையின் மகன் என்பார் ; தாயையே ஏமாற்றுவார்!'' - இந்தியாவின் 'வாட்டர்மேன்’ மோடி மீது தாக்கு | modi will not prime minister agaiin - says waterman Rajendra Singh

வெளியிடப்பட்ட நேரம்: 19:25 (14/03/2019)

கடைசி தொடர்பு:19:25 (14/03/2019)

'கங்கையின் மகன் என்பார் ; தாயையே ஏமாற்றுவார்!'' - இந்தியாவின் 'வாட்டர்மேன்’ மோடி மீது தாக்கு

பிற அரசுகள் 30 ஆண்டுகளில் செய்யாத கங்கையைத் தூய்மைப்படுத்தும் பணியை, 3 மாதங்களில் செய்து காட்டுவேன் என்று பேசிய பிரதமர் மோடி, 'ஒரு பொய்யர்' என்று வாட்டர்மேன் ராஜேந்திரசிங் கடுமையாகத் தாக்கியுள்ளார். 

மோடி மீது வாட்டர்மேன் ராஜேந்திரசிங் தாக்கு

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் பாரதிய ஜனதா கட்சியும்  காங்கிரஸ் கட்சியும் மாநில கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றன. இந்தியாவின் 'வாட்டர்மேன் ' என்று  அழைக்கப்படுபவரும்  மக்சேசே விருது பெற்றவருமான ராஜேந்திரசிங்,  மலையாள மனோராமா பத்திரிகைக்கு இன்று  பேட்டியளித்துள்ளார். அதில், '' கடந்த 2013- ம் ஆண்டு பிரதமர் மோடி, தன்னை கங்கையின் மகன் என்றார்.  3 மாதங்களில் கங்கையைச் சுத்தப்படுத்திவிடுவேன் என்று வாய்ச் சவடால் பேசினார். இப்போது, தன் தாயையே ஏமாற்றிவிட்டார். பிரதமர் மோடி, வாய்ச் சவடால் மிக்கவரே தவிர செயல்திறன் கொண்டவர் இல்லை. 

குஜராத் முதல்வராக இருந்தபோதும்கூட, மோடியின் செயல்பாட்டில் எனக்கு திருப்தி இருந்ததில்லை. குஜராத் முதல்வராக இவர்  இருந்த போதுதான், சௌராஷ்டிரா பகுதியில் ஏராளமான ரசாயன  ஆலைகளைத் திறக்க அனுமதி அளித்தார். தற்போது, சௌராஷ்டிரா பகுதி ரசாயனத் தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல் மாசடைந்து அழியும் நிலையில் உள்ளது. . குஜராத்தின் சுற்றுச்சூழலை மாசுபடுத்தியதில் மோடிக்கு முக்கியப் பங்கு உண்டு. குஜராத் முதல்வராக கேசுபாய் பட்டேல் இருந்தபோது, சுற்றுச்சூழல் மீது  அக்கறைகொண்டிருந்தார். நீர் மேலாண்மை பற்றி அறிந்துவைத்திருந்தார்.

மோடி

எப்போது மோடி  குஜராத் முதல்வராகப் பதவியேற்றாரோ, அதற்குப் பிறகு நான் குஜராத் செல்வதை படிப்படியாகக் குறைத்துக் கொண்டேன். எனக்கு, நேரடியாக அவர்  மிரட்டல் விடுத்ததில்லை.  பிரதமருக்கு  எதிராகப் பல அமைப்புகள் குஜராத்தில் உள்ளன. எனக்கு அவை அழைப்பு விடுத்தால், அந்த அமைப்புகளுக்கு மறைமுகமாக  பிரதமர்  நெருக்கடி கொடுப்பதை வழக்கமாகக்கொண்டிருந்தார். உதாரணத்துக்கு, காந்திய இயக்கங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த நிதியைக்கூட தடுத்து நிறுத்தியுள்ளார். 

மோடி, தன்னை கங்கையின் மகன் என்று சொல்லிக்கொள்வார். கங்கை நதிக்காக 111 நாள்கள் பட்டினியாகக் கிடந்து இறந்துபோன பேராசிரியர் ஜி.டி. அகர்வாலைக்கூட அவர் சந்திக்க விரும்பியதில்லை'' என்று கூறியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close