சீனப் பொருள்களைப் புறக்கணியுங்கள்..! - ட்ரெண்ட் ஆகும் #BoycottChineseProducts | BoycottChineseProducts trends on Twitter

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (14/03/2019)

கடைசி தொடர்பு:22:30 (14/03/2019)

சீனப் பொருள்களைப் புறக்கணியுங்கள்..! - ட்ரெண்ட் ஆகும் #BoycottChineseProducts

தீவிரவாதத்திற்கு ஆதரவளிக்கும் சீனாவின் போக்கிற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சமூக வலைதளங்களில் #BoycottChineseProducts என்ற ஹேஷ்டேக் மூலம் சீனப் பொருள்களை வாங்கக் கூடாது, சீனப் பொருள்களைப் பயன்படுத்தக் கூடாதென்று தங்கள் எதிர்ப்பைப் ட்ரெண்டாக்கிவருகிறார்கள்.

புல்வாமா தாக்குதலுக்குக் காரணமான ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அஸாரை சர்வதேச தீவிரவாதி என்று ஐ.நா.வில் அறிவிக்கும் இந்தியாவின் முயற்சி, சீனாவின் எதிர்ப்பால் வீணானது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் மூலமாக மசூத் அஸாரை சர்வதேசத் தீவிரவாதி என அறிவிக்கும் முயற்சிக்கு அமெரிக்கா, பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து, போலந்து ஆகிய நாடுகள் ஆதரவளிக்க முன்வந்தன. இச்சூழலில், சீனா தனது ஆதரவை வழங்காததால் இந்தியாவின் முயற்சி பின்னடைவைச் சந்தித்தது. கடந்த பத்தாண்டுகளில், தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் முயற்சியை சீனா எதிர்ப்பது இது நான்காவது முறையாகும். 

சீனா இந்தியா

தீவிரவாதத்திற்கு ஆதரவளிக்கும் சீனாவின் போக்கிற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சமூக வலைதளங்களில் #BoycottChineseProducts என்ற ஹேஷ்டேக் மூலம் சீனப்பொருள்களை வாங்கக் கூடாது, சீனப் பொருள்களைப் பயன்படுத்தக் கூடாதென்று தங்கள் எதிர்ப்பைப் ட்ரெண்டாக்கிவருகிறார்கள். ஏற்கெனவே, தமிழகத்தில் சீனப் பட்டாசுகளைத் தடை செய்யச்சொல்லி பல காலமாகக் குரலெழுப்பப்பட்டுவருகிறது. இந்தச் சூழலிலாவது சீனப் பட்டாசுகள் உள்ளிட்ட பிற பொருள்களின் இறக்குமதியைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சீனப் பொருள்களின் இறக்குமதியைத் தடுக்கும் விதமாக இறக்குமதிக்கான வரியைக் கடுமையாக உயர்த்தலாமென்றும் பலர் சமூக வலைதளங்களில் யோசனையைப் பகிர்ந்துவருகிறார்கள். 

தீவிரவாதத்திற்கு ஆதரவான சீனாவின் செயல்பாடுகுறித்து, அந்த நாட்டின் பெயரைக் குறிப்பிடாமல், 'ஏமாற்றமளித்துள்ளது' என்று மட்டும் இந்தியா கருத்து வெளியிட்டுள்ளது.


[X] Close

[X] Close