``காலையில்தான் பழுதுபார்க்கப்பட்டது!” - 6 பேரை பலிகொண்ட மும்பை மேம்பால விபத்து | A foot over bridge near Chhatrapati Shivaji Maharaj railway station collapses.

வெளியிடப்பட்ட நேரம்: 09:20 (15/03/2019)

கடைசி தொடர்பு:09:20 (15/03/2019)

``காலையில்தான் பழுதுபார்க்கப்பட்டது!” - 6 பேரை பலிகொண்ட மும்பை மேம்பால விபத்து

மும்பையில், மேம்பால நடைமேடை இடிந்து விழுந்த விபத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர். 35-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். 

மும்பை மேம்பால விபத்து

 மும்பையில் மிகவும் பிஸியாகச் செயல்படும் இடங்களில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையமும் ஒன்று. இங்கு, ஒவ்வொரு நாளும் லட்சக் கணக்கான மக்கள் வந்துசெல்கின்றனர். கூட்டம் அலைமோதும் இந்த ரயில் நிலையத்தில், நேற்று மாலை பல பயணிகள் தங்களின் வேலை முடித்து அவசரமாக வீட்டுக்குச் சென்றுகொண்டிருக்கும் நேரத்தில், ரயில் நிலையத்தில் இருந்து வெளியில் செல்லும் மேம்பாலத்தின் நடைமேடை இடிந்து விழுந்துள்ளது. சரியாக மாலை 7:15 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில், தற்போது வரை ஆறு பேர் உயிரிழந்தர். 35-க்கும் அதிகமானவர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மும்பை

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், விரைந்து வரவேண்டிய மீட்புப்படையினர் 20 நிமிடங்கள் வரை தாமதமாக வந்ததாகப் புகார் கூறப்படுகிறது. பின்னர் வந்த மீட்புப் படை வீரர்கள், இடிபாடுகளை அகற்றி உள்ளே சிக்கிய பொதுமக்களை வெளியில் கொண்டுவந்துள்ளனர். மேம்பாலத்தில் இப்படி ஒரு விபத்து நடந்ததாக 15 நிமிடங்கள் வரை ரயில் நிலையத்தில் இருந்தவர்களுக்குத் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது. 

மேம்பாலம்

இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறும்போது, ``விபத்து நடக்கும்போது நானும் அங்குதான் இருந்தேன். அப்போது சிவப்பு சிக்னல் போடப்பட்டிருந்ததால் பெரும்பாலானவர்களால் ரயில் நிலையத்தைக் கடந்து வெளியில் வரமுடியவில்லை. அதனால், விபத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இல்லையேல் இன்னும் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும். மேலும், நேற்று காலைதான் இந்த மேம்பாலம் பழுது பார்க்கப்பட்டது. அதன் பிறகும் அதே வழியில் பொதுமக்களை செல்ல அனுமதித்தது பெரும் தவறு. அதுவே விபத்துக்கான முக்கியக் காரணம்’ எனக் கூறியுள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கும், காயமடைந்தவர்களுக்கும் அரசியல் தலைவர்கள் தங்களின் வருத்தத்தைத் தெரிவித்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்கப்படும் என மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்  அறிவித்துள்ளார். 


[X] Close

[X] Close