காங்கிரஸ் வெப்சைட்டில் ஹர்திக் படேலின் சர்ச்சை புகைப்படம்! - கட்சியில் சேர்ந்த 5-வது நாளில் பதற வைத்த ஹேக்கர் | The image of Hardik  patel  seen on the Gujarat Congress’ website

வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (16/03/2019)

கடைசி தொடர்பு:14:59 (16/03/2019)

காங்கிரஸ் வெப்சைட்டில் ஹர்திக் படேலின் சர்ச்சை புகைப்படம்! - கட்சியில் சேர்ந்த 5-வது நாளில் பதற வைத்த ஹேக்கர்

பட்டிதார் அமைப்புத் தலைவர் ஹர்திக் படேல், காங்கிரஸில் இணைந்து சில நாள்கள் கடந்த நிலையில் குஜராத் காங்கிரஸ் இணையதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

ஹர்திக் படேல்

கடந்த 2015 -ம் ஆண்டு குஜராத் மாநில படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி மிகப் பெரியளவில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியவர் ஹர்திக் படேல். ஆர்ப்பாட்டங்கள் வாயிலாக வன்முறையைத் தூண்டியதாக, ஹர்திக் படேலுக்கு இரண்டாண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. அதன்பிறகு அவர் குஜராத்தில் ஆளும் பா.ஜ.க.வுக்கு கடும் நெருக்கடி கொடுக்கத் தொடங்கினார். காங்கிரஸ் அவருக்கு அழைப்பு விடுத்தது. இதையடுத்து, ஒரு பெண்ணுடன் ஹர்திக் மிக நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வீடியோக்கள் குறித்து ஹர்திக் பேசுகையில், ` என் தனிப்பட்ட விவகாரங்களில் பா.ஜ.க அத்துமீறித் தலையிடுகிறது.  ஆபாச வீடியோக்கள் குறித்து எனது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

ஹர்திக் படேல்

இந்த நிலையில், தற்போது மீண்டும் இதுபோன்ற சர்ச்சையில் சிக்கியுள்ளார் ஹர்திக். கடந்த வாரம் மார்ச் 12-ம் தேதி குஜராத் மாநில, அஹமதாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் ஹர்திக் படேல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பா.ஜ.க-வினர் அவரைக் கடுமையாக விமர்சித்தனர். இதையடுத்து குஜராத் காங்கிரஸ் இணையதளமான `Gujarat Pradesh Congress Committee’ தளம் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லை இணையதளத்தில் ஹர்திக் ஒரு பென்ணுடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படம் பதிவேற்றப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டு வெளியான ஆபாச வீடியோக்களில் இருந்து ஸ்கிரீன் ஷார்ட் எடுத்து புகைப்படத்தை பதிவேற்றியுள்ளனர்.  

இதுகுறித்து மாநில காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணீஷ் தோ3ஷி பேசுகையில், `ஹர்திக் காங்கிரஸின் இணைந்து மக்கள் பணியாற்றுவதை தடுக்கவே இது போன்ற வேலைகளை பா.ஜ.க செய்து வருகிறது. இது கேவலமான விஷயம். இது பற்றி விரைவில் இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் சைபர் குற்றப்பிரிவில் புகார் கொடுப்போம்’’ என்று குறிப்பிட்டார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close