2019-க்குப் பிறகு தேர்தலே நடக்காது - மீண்டும் சர்ச்சையில் பா.ஜ.க எம்.பி சாக்‌ஷி மஹராஜ் | there will be no election after 2019 says BJP MP Sakshi Maharaj

வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (16/03/2019)

கடைசி தொடர்பு:15:57 (18/03/2019)

2019-க்குப் பிறகு தேர்தலே நடக்காது - மீண்டும் சர்ச்சையில் பா.ஜ.க எம்.பி சாக்‌ஷி மஹராஜ்

“வரவிருக்கும் இந்தத் தேர்தலுக்குப் பிறகு, நாட்டில் தேர்தலே நடக்காது” என்று பேசியிருக்கிறார், உத்தரப் பிரதேச மாநிலம் உன்னோவோ பா.ஜ.க எம்.பி சாக்‌ஷி மகராஜ்.

              பாஜக எம்பி சாக்‌ஷி மகராஜ்                 

”நரேந்திர மோடி உலகளாவிய தலைவர். இன்று, இந்த நாடு இப்படி இருப்பதற்கு மோடிதான் காரணம் என மக்கள் நினைக்கிறார்கள். முதன்முறையாக, நாட்டில் ஒரு பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. நான் ஒரு சாது. 2019 தேர்தலுக்குப் பிறகு, நாட்டில் தேர்தலே நடக்காது. இந்த முறை நாட்டு மக்களுக்காக ஒரு தேர்தல் நடக்கப்போகிறது. 2014-ல் மோடி அலைதான் இருந்தது. இப்போது, மோடி சுனாமி வரப்போகிறது” என சர்ச்சைக்குரிய இந்த விஷயத்தைப் பேசியிருக்கிறார் பா.ஜ.க எம்.பி சாக்‌ஷி மகராஜ்.

டெல்லி ஜுமா மசூதி இருந்த இடத்தில் இந்துக் கோயில் இருந்ததால், அது இடிக்கப்பட வேண்டும் என்றும், பாலியல் வன்கொடுமைக் குற்றவாளியும், பத்திரிகையாளர் ராம் சந்தர் கொலைக் குற்றவாளியுமான மதகுரு குர்மீத் ராம் ரஹீம் சிங்கை நிரபராதி என்றும், சர்ச்சைப் பேச்சுகளைத் தொடர்பவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close