ஒரே நாளில் ஒட்டுமொத்தமாக பெயர் மாற்றம்! - ட்விட்டர்வாசிகளுக்கு ஷாக் கொடுத்த பா.ஜ.க | modi changed his name on twitter

வெளியிடப்பட்ட நேரம்: 14:11 (17/03/2019)

கடைசி தொடர்பு:08:17 (18/03/2019)

ஒரே நாளில் ஒட்டுமொத்தமாக பெயர் மாற்றம்! - ட்விட்டர்வாசிகளுக்கு ஷாக் கொடுத்த பா.ஜ.க

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் பக்கத்தில் தன் பெயரை மாற்றியுள்ளார். அவரைத் தொடர்ந்து பா.ஜ.க தலைவர்களும் தங்கள் பெயரை மாற்றியுள்ளனர். 

மோடி

வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளும் விறுவிறுப்பாகத் தயாராகி வருகின்றனர். பல்வேறு வழிகளில் தங்கள் கட்சிகளை மக்களிடம் கொண்டு செல்லப் பல புதிய முறைகளைக் கையாண்டு வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று தன் ட்விட்டர் பக்கத்தில்  `நானும் காவலாளி தான்’ என்ற பெயரில் ஒரு புதிய பிரசார வீடியோ பதிவை வெளியிட்டிருந்தார். அதனுடன்,  ``உங்கள் காவலாளி தேசத்துடன் துணை நிற்கிறார். ஆனால் நான் தனி ஆள் அல்ல, யாரெல்லாம் ஊழலை, சமூக கொடுமைகளை எதிர்த்துப் போராடுகிறீர்களோ அவர்கள் அனைவருமே காவலாளிகள்தான். இந்தியாவின் வளர்ச்சிக்காக போராடும் அனைவரும் காவலாளிதான். இன்று அனைத்து இந்தியர்களும் கூறுவர்  `நானும் காவலாளிதான்’ என்று” இவ்வாறு பதிவிட்டிருந்தார்.

இதற்கிடையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காவலாளி ஒரு திருடன் எனக் கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று பிரதமர் மோடி ட்விட்டரில் தன் பெயரை  ‘காவலாளி நரேந்திர மோடி’ என மாற்றியுள்ளார்.

இவரைத் தொடர்ந்து பா.ஜ.க தலைவர் அமித்ஷா,  மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், பியூஸ் கோயல், ஹர்ஷ்வர்தன், மகாராஷ்ட்ரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பல பா.ஜ.கவினரும்  தங்கள் பெயருக்கு முன் காவலாளி எனச் சேர்த்துள்ளனர். ஒரே நாளில் ஒட்டுமொத்த பா.ஜ.கவும் ட்விட்டரில் தங்கள் பெயரை மாற்றியுள்ளது சமூக வலைதளத்தில் அதிக கவனம் ஈர்த்துள்ளது. 

 


[X] Close

[X] Close