மனோகர் பாரிக்கர் மரணம்: கோவாவில் பி.ஜே.பி ஆட்சிக்கு சிக்கல்? | bjp government in goa

வெளியிடப்பட்ட நேரம்: 10:13 (18/03/2019)

கடைசி தொடர்பு:10:13 (18/03/2019)

மனோகர் பாரிக்கர் மரணம்: கோவாவில் பி.ஜே.பி ஆட்சிக்கு சிக்கல்?

கோவா மாநில முதல்வரும் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சருமான மனோகர் பாரிக்கர் உடல்நலக்குறைவால் மார்ச் 17-ம் தேதி (நேற்று) காலமானார். இதனால் கோவாவில் ஆட்சியில் உள்ள பி.ஜே.பி தன்னுடைய பெரும்பான்மையை இழக்கும் நிலையில் உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் 17 தொகுதிகளிலும். பி.ஜே.பி 13 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. மாநிலத்தில் ஆட்சி அமைக்க எந்தக் கட்சியும் போதுமான தனிப்பெரும்பான்மையைப் பெறாத நிலையில், கோவா பார்வேர்ட் பார்ட்டி மற்றும் சுயேச்சைகளின் ஆதரவுடன் மனோகர் பாரிக்கர் தலைமையில் பி.ஜே.பி  ஆட்சி அமைத்தது.

மனோகர் பாரிக்கர்

கடந்த பிப்ரவரி மாதம் பி.ஜே.பி-யின் முன்னணித் தலைவர்களின் ஒருவரும் சட்டமன்ற உறுப்பினருமான பிரான்சிஸ் டி சோசா காலமானார். அதேபோல் கோவா சட்டமன்றத்தில் ஏற்கெனவே இரண்டு தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த நிலையில், ஆட்சி அமைக்க தங்களை அழைக்க வேண்டும் எனச் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான சந்திரகாந்த் கவுலேக்கர் சார்பில் கோவா ஆளுநருக்குக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில், கோவா முதல்வர் மானோகர் பாரிக்கரின் இறப்பு, கோவாவில் நடைபெற்று வரும் பி.ஜே.பி-யின் ஆட்சிக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.