பணம் எடுக்க இனி டெபிட் கார்டு தேவையில்லை! – எஸ்.பி.ஐ புதிய முயற்சி | SBI customers can now make ATM withdrawals without debit card

வெளியிடப்பட்ட நேரம்: 15:46 (19/03/2019)

கடைசி தொடர்பு:15:46 (19/03/2019)

பணம் எடுக்க இனி டெபிட் கார்டு தேவையில்லை! – எஸ்.பி.ஐ புதிய முயற்சி

இந்தியாவிலேயே முதன்முறையாக ஏ.டி.எம் மையத்தில் டெபிட் கார்டு இல்லாமலே பணம் எடுக்கும் அம்சத்தை எஸ்.பி.ஐ அறிமுகம் செய்துள்ளது.

யோனோ

பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ (பாரத் ஸ்டேட் வங்கி), கடந்த 2017 -ம் ஆண்டு யோனோ (Yono App) என்ற டிஜிட்டல் பேங்கிங் சேவையை அறிமுகம்செய்தது.  இந்த செயலிமூலம் எஸ்.பி.ஐ பயனர்கள் டெபிட் கார்டு இல்லாமலே பணம் எடுக்க முடியும்.

பயனர்கள், முதலில் யோனோ கேஷ் (Yono Cash ) மொபைல் அப்ளிகேஷனை டவுண்லோடு செய்ய வேண்டும். பின்னர்,  6 இலக்க யோனோ கேஷ் அடையாள எண்ணை உருவாக்க வேண்டும்.  இதனையடுத்து, பதிவுசெய்த மொபைல் நம்பருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி உறுதிசெய்யப்படும். உறுதிசெய்யப்பட்டதும், ஏ.டி.எம்-களில் யோனோ கேஷ் செயலியின் எண் மற்றும் கடவுச்சொல்லை பதிவுசெய்து பணத்தை எடுத்துக்கொள்ளலாம். இந்த பரிவர்த்தனைக்கு ஏ.டி.எம் கார்டு தேவைப்படாது.  இந்தச் சேவை இப்போதைக்கு இந்தியாவில் உள்ள 16,500 ஏ.டி.எம் மையங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க