லால் பகதூர் சாஸ்திரி சிலைக்கு மாலை அணிவித்த பிரியங்கா - கங்கை நீரால் கழுவிய பா.ஜ.க! | Priyanka Gandhi Vadra Garlands Lal Bahadur Shastri's Statue, BJP 'Purifies' It With Gangajal

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (20/03/2019)

கடைசி தொடர்பு:14:27 (25/03/2019)

லால் பகதூர் சாஸ்திரி சிலைக்கு மாலை அணிவித்த பிரியங்கா - கங்கை நீரால் கழுவிய பா.ஜ.க!

பிரியங்கா காந்தி

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட பிரியங்கா காந்தி, மக்களவைத் தேர்தலுக்கு உத்தரப் பிரதேச கிழக்கு மண்டலப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் சுற்றுப்பயணமாக, கடந்த 3 நாள்களாக உ.பி.கிழக்கு மண்டலத்தில் பிரியங்கா காந்தி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதில் ஒரு பகுதியாக கங்கையில் 140 கிலோ மிட்டர் தூரம் படகில் பயணம் செய்து மக்களுடன் உரையாடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து ராம்நகரில் உள்ள சாஸ்த்ரி சவுக்கில் உள்ள மறைந்த முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்த்ரியின் சிலைக்கு மாலை அளித்து மரியாதை செலுத்தினார் பிரியங்காகாந்தி   

பா.ஜ.கவினர் பிரியங்காவிற்கு எதிர்ப்பு

அங்கு வந்த பா.ஜ.க-வினர் அவருடைய இந்தச் செயல்பாட்டிற்கு பா.ஜ.கவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதோடு கங்கை நீரால் சாஸ்த்ரியின் சிலையைக் கழுவியுள்ளனர். லால்பகதூர் சாஸ்த்ரியின் சிலையை கங்கை நீரால் பா.ஜ.க-வினர் கழுவிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பேசியுள்ள உத்தரப் பிரதேச பா.ஜ.க பிரமுகர் 

``பிரியங்காவின் கணவர் ராபர்ட் வாதேரா மோசடி வழக்கில் தொடர்புடையவர் அப்படியான ஊழல் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சாஸ்த்ரியின் சிலையை தொட்டு மாலையிட்டதால் புனிதம் கெட்டுவிட்டது. அதனால்தான் கங்கையைக் கொண்டு சிலையைக்  கழுவினோம்' என்று கூறியுள்ளார்           

.