``கடைசி நேரத்திலும் போர்டிங் பாயின்ட் மாற்றலாம்!”: - IRCTC அறிவிப்பு | You can change your boarding station 4 hours before departure of the train...irctc's new scheme

வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (21/03/2019)

கடைசி தொடர்பு:13:50 (21/03/2019)

``கடைசி நேரத்திலும் போர்டிங் பாயின்ட் மாற்றலாம்!”: - IRCTC அறிவிப்பு

ஓர் ஊரிலிருந்து இன்னோர் ஊருக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தபின் ஏதேனும் காரணங்களால் நீங்கள் குறிப்பிட்ட அந்த ரயில் நிலையத்தில் ரயில் ஏற முடியாத சூழ்நிலைகள் ஏற்படலாம். அப்போது உங்களால் வழியில் இருக்கும் இன்னொரு ரயில்நிலையத்திற்கு உங்களது டிக்கெட்டின் போர்டிங் ஸ்டேஷனை மாற்றமுடியும். இதற்காகக் கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. இதை #IRCTC தளத்தில் உங்கள் கணக்கில் லாகின் செய்து மாற்றமுடியும். இப்போது இருக்கும் விதிமுறைகளின்படி ரயில் புறப்படுவதற்கு 24 மணிநேரங்களுக்கு முன் இதைச் செய்யவேண்டும். இந்த நேரத்தை 4 மணிநேரமாகக் குறைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. அதாவது முதல் பயணிகள் சார்ட் தயாராகும் முன்வரை உங்களால் ஏறும் ரயில்நிலையத்தை மாற்றமுடியும்.

போர்டிங் ஸ்டேஷன் மாற்றும் வசதி #IRCTC

இதை எப்படிச் செய்யவேண்டும் எனச் சுருக்கமாகப் பார்ப்போம். முதலில் ஐஆர்சிடிசி தளத்தில் உங்கள் கணக்கை லாகின் செய்யுங்கள் .அதில் `My Transactions' பகுதி இருக்கும். அதில் இருக்கும் `Booking History' சென்று போர்டிங் ஸ்டேஷன் மாற்றவேண்டிய டிக்கெட்டைத் தேர்வு செய்யவும். அதில் `Change boarding station' என்ற ஆப்சனை தேர்வு செய்யுங்கள். அதில் வரும் ரயில் நிலையங்களில் நீங்கள் ஏறப்போகும் ரயில் நிலையம் எதுவோ அதைத் தேர்வுசெய்யுங்கள்.

ஐஆர்சிடிசி தளத்தில் இருக்கும் வசதி

மேலும், 139 என்ற எண்ணில் அழைத்தும் ஏறும் இடத்தை மாற்றமுடியும். அல்லது புதிய போர்டிங் ஸ்டேஷனில் நேரில் சென்று கடிதம் ஒன்றைக் கொடுத்ததும் இதைச் செய்யமுடியும். இந்தப் புதிய விதிமுறைகள் வரும் மே 1-ம் தேதிக்குள் நடைமுறைப்படுத்தப்படுமாம். இது ரயில் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

நீங்க எப்படி பீல் பண்றீங்க