மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறாரா சல்மான் கான்? | Salman khan answered for election rumours

வெளியிடப்பட்ட நேரம்: 08:40 (22/03/2019)

கடைசி தொடர்பு:14:59 (25/03/2019)

மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறாரா சல்மான் கான்?

த்தியப் பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல், நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்பட்ட நிலையில், மத்தியப் பிரதேசத்தில் 15 ஆண்டுக்காலம் ஆட்சியில் இருந்த பி.ஜே.பி தோல்வியைச் சந்தித்தது. தற்போது கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. மக்களவைச் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கடந்த 1989-ம் ஆண்டு தேர்தலிலிருந்து இந்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று வருகிறார்.

சல்மான் கான்

இந்நிலையில், நடிகர் சல்மான் கானும் இந்தூர் தொகுதியைச் சார்ந்தவர் என்பதால் அவரைப் பிரசாரத்துக்குக் களமிறக்கக் காங்கிரஸ் முயல்வதாகச் செய்திகள் வெளியாகின. அதேபோல் சில தினங்களுக்கு முன்பு மோடி தன்னுடைய ட்விட்டரின் வாயிலாக இளைஞர்கள் வாக்களிப்பதை ஊக்குவிக்கும்படி நடிகர் அமீர்கான் மற்றும் சல்மான் கான் ஆகியோரிடம் கேட்டுக்கொண்டார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக சல்மான் கான், ``நாம் ஜனநாயக நாட்டில் உள்ளோம், வாக்களிப்பது என்பது நம் ஒவ்வொரு இந்தியரின் உரிமையாகும். அரசாங்கத்தை நிர்ணயிப்பதில் உங்கள் வாக்குகளைப் பயன்படுத்துங்கள்” எனத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

ட்விட்டர் பதிவு

இந்நிலையில் சல்மான் கான் பி.ஜே.பி சார்பாகத் தேர்தலில் பங்கெடுக்கப்போவதாகத் தகவல்கள் பரவின. இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக, “நான் தேர்தலில் போட்டியிடவும் இல்லை, எந்த அரசியல் கட்சிக்கும் பிரசாரம் மேற்கொள்ளவும் இல்லை” எனத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.