அக்ரி கமாடிட்டி! | agri commodity

வெளியிடப்பட்ட நேரம்: 20:42 (22/03/2019)

கடைசி தொடர்பு:20:42 (22/03/2019)

அக்ரி கமாடிட்டி!

மென்தா ஆயில், இதன் நகர்வைச் சென்ற வாரம் நாம் விவரித்தபோது சொன்னது, தொடர்ந்து ஒரு ஹயர் பாட்டத்தை ஏறுமுகமாக இருந்தாலும், மேலே முந்தைய உச்சமான 1638-ஐ தாண்ட முடியாமலும்...

மென்தா ஆயில்
மென்தா ஆயில், இதன் நகர்வை சென்ற வாரம் நாம் விவரித்தபோது சொன்னது. தொடர்ந்து ஒரு ஹயர் பாட்டத்தை ஏறுமுகமாக இருந்தாலும், மேலே முந்தைய உச்சமான 1638-ஐ தாண்ட முடியாமலும் உள்ளது. எனவே, தற்போது ஒரு கன்சாலிடேஷன் நகர்வுக்குள் உள்ளது. சென்ற வாரம் அந்த கன்சாலிடேஷன் முடிவுக்கு வந்து, மென்தா ஆயில் கீழ் நோக்கி நகர ஆரம்பித்துள்ளது.

சென்ற  வாரம் சொன்னது…
“மென்தா ஆயில் வலிமையான ஒரு ஏற்றத்திற்குப் பிறகு, மீண்டும் ஒரு பக்கவாட்டு நகர்வுக்குள் நுழைந்துள்ளது.  இதன் தடைநிலை 1710 ஆகும். ஆதரவு நிலை 1655 என்ற புள்ளியில் உள்ளன.”
மென்தா ஆயில் சென்ற வாரம், பக்கவாட்டு நகர்வில் இருந்து மேலே ஏற முற்பட்டபோது, அதிகபட்சமாக 1707-ஐ  தொட்டு, நாம் கொடுத்திருத்த தடைநிலை  1710-ஐ தாண்ட முடியாமல் கீழே இறங்கியது.  அப்படி இறங்கியபோது,  அப்டிரெண்ட் லைனை உடைத்தது. இதனால் இறக்கம் வேகம் எடுத்தது.  எனவே, சென்ற வாரம் முழுவதும் இறங்குமுகமாகவே இருந்துவந்தது. ஒவ்வொரு நாளும், புதிய பாட்டத்தைத் தோற்றுவித்து,  அப்டிரெண்ட் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளதை ஊர்ஜிதம் செய்தது.

 அக்ரி கமாடிட்டிஇனி என்ன செய்யலாம்..? 
மென்தா ஆயில், அப்டிரெண்ட் முடிவுக்கு வந்து கீழே திரும்பிய நிலையில்,  முதல்கட்ட ஆதரவு என்பது 1595 என்ற எல்லையில் உள்ளது.  மேலே 1650 என்பது உடனடித் தடைநிலை ஆகும்.

காட்டன்
காட்டன் விலை நகர்வு, மென்தா ஆயிலின் விலை நகர்வுக்கு நேர் எதிர்மாறாக நடந்துள்ளது. காட்டன் மெள்ள மெள்ள, இறக்கத்திலிருந்து மீண்டு ஏறுமுகமாறியுள்ளது. ஆனால், மென்தா ஆயில் ஏற்றத்திலிருந்து மாறி இறங்குமுகமாக மாறியுள்ளது.  காட்டன் பிப்ரவரி 2019 முழுவதும் பக்கவாட்டு நகர்வில் இருந்து, மேலே உடைத்து  வலிமையான ஏற்றத்தைக் கொடுத்துள்ளது.

 முந்தைய வாரம் சொன்னது.. 
“காட்டன், ஒரு வலிமையான ஏற்றத்திற்குப் பிறகு தற்போது ரிடிரேஸ்மென்டில் உள்ளதாக எடுத்துக்கொள்ளலாம்.  தற்போது, 20890 என்பது ஆதரவாகவும், 21250 என்பது தடைநிலையாகவும் உள்ளது..”
நாம் கொடுத்திருந்த 21250 என்ற தடைநிலையைக் கடந்த வாரம் திங்கள் அன்றே வலிமையாக உடைத்து ஏறி, உச்சமாக 21470-ஐ தொட்டது. ஆனாலும், முடியும்போது இறங்கி 21290 என்ற எல்லைக்கே திரும்பியது.  கடந்த செவ்வாயன்று இன்னும் கொஞ்சம் இறங்கி, குறைந்தபட்ச புள்ளியாக 21130-ஐ தொட்டாலும், அடுத்தடுத்த நாள்களில் ஏற்றம் நிகழத்தான் செய்தது. இதில்,  கடந்த வெள்ளியன்று காட்டன் ஒரு கேப் அப் மூலம் வலிமையாக ஏறி முடிந்துள்ளது.

இனி என்ன செய்யலாம்..? 
காட்டன் வலிமையாக ஏறினாலும், டோஜியில் முடிந்துள்ளது.  எனவே, மேலே 21510 வலிமையான தடைநிலையாக மாறியுள்ளது.  கீழே 21350 என்ற எல்லை முக்கிய ஆதரவாக உள்ளது.

சென்னா
சென்னா என்.சி.டெக்ஸ் சந்தையில் வியாபாரம் ஆகிறது. 

கடந்த வாரம் சொன்னது… 
“சென்னா மார்ச் மாத ஒப்பந்தம் முடிவுக்கு வருவதால், ஏப்ரல் மாத ஒப்பந்தத்தை எடுத்துக்கொள்ளலாம்.  தற்போது 4205 ஆதரவாகவும், 4260 தடைநிலையாகவும் உள்ளது.“
சென்னா பற்றி சென்ற வாரம் சொன்னபோது, சற்றே ஏறுமுகமாகவே இருந்தது. ஆனாலும் அது ஒரு தட்டுத்தடுமாறிய ஏற்றமாக இருந்தது, என்று கூறியிருந்தோம்.  தொடர்ந்து கடந்த வாரமும் அதே தட்டுதடுமாற்றத்துடன்தான் இருந்து வந்தது. நாம் கொடுத்திருந்த தடைநிலையான 4260ஐ தாண்டி ஏற முற்பட்டபோதெல்லாம், முடிவில் 4260க்கு கீழாகவே முடிந்துள்ளது.   கீழே நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 4205-ஐ 19.03.19 அன்று சற்றே மெல்ல உடைத்து 4201வரை இறங்கினாலும், மீண்டும் மேலே ஏறியே முடிந்துள்ளது.

இனி என்ன செய்யலாம்? 
சென்னா தற்போது ஏறவும் முடியாமல் இறங்கவும் முடியாமல் தடுமாறும் நிலையில் இருந்து வருகிறது.  இன்னமும் 4200 என்ற எல்லை ஆதரவாகவும், மேலே 4290 தடைநிலையாகவும் உள்ளது.

 அக்ரி கமாடிட்டி

- தி.ரா.அருள்ராஜன்
தலைவர், பங்குச் சந்தை,  கமாடிட்டி  சந்தை பயிற்சி மையம், www.ectra.in