சொத்து ரூ.375 கோடியாம், சொந்தக் கார் இல்லையாம்!‍- வேட்பு மனுவில் ஜெகன் மோகன் ரெட்டி தகவல் | Jagan Reddy Declares Assets Worth Rs. 375 Crore

வெளியிடப்பட்ட நேரம்: 15:25 (23/03/2019)

கடைசி தொடர்பு:15:25 (23/03/2019)

சொத்து ரூ.375 கோடியாம், சொந்தக் கார் இல்லையாம்!‍- வேட்பு மனுவில் ஜெகன் மோகன் ரெட்டி தகவல்

ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திர மாநிலத்தில் வரும் ஏப்ரல் 11-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் நடைபெறுகிறது. ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி  25 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் 175 சட்டமன்றத் தொகுதிகளுக்குமான வேட்பாளர் பட்டியலை அண்மையில் வெளியிட்டார். ஜெகன் மோகன் ரெட்டி புலிவேந்துலா சட்டமன்றத் தொகுதியில் களம் காண்கிறார்.

இதற்காகத் தனது வேட்புமனுவைத் தேர்தல் அதிகாரிகளிடம் நேற்று சமர்ப்பித்தார். பிரமாணப்பத்திரத்தில் தனக்கு ரூ.375 கோடி மதிப்புடைய சொத்துகள் இருப்பதாகவும் தன்னிடம் சொந்தமாக வாகனங்கள் எதுவும் இல்லை எனத் தெரிவித்துள்ளார். அசையும் சொத்துகளின் மதிப்பு 339 கோடியும், அசையா சொத்துகள் 35 கோடி மதிப்பிலும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். தன் மனைவி பேரில் 124 கோடிக்குச் சொத்துகள் இருப்பதாகவும் தனது இரண்டு மகள்கள் பெயரில் 11 கோடிக்கு அசையும் சொத்துகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தன்னிடம் உள்ள 4 புல்லட் ப்ரூவ் வாகனங்கள் வேறு நபர்களின் பெயர்களின் இருப்பதாகவும் மேலும் தனக்கு எதிராக 31 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வேட்புமனுத் தாக்கலின் போது தனது பெயரில் 343 கோடிக்கு சொத்து இருப்பதாக ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்திருந்தார்.