ராகுல் முன்னிலையில் காங்கிரஸில் இணைகிறாரா சத்ருகன் சின்ஹா? | Shatrughan Sinha going to join Congress

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (24/03/2019)

கடைசி தொடர்பு:08:05 (24/03/2019)

ராகுல் முன்னிலையில் காங்கிரஸில் இணைகிறாரா சத்ருகன் சின்ஹா?

தேர்தல் தேதி நெருங்க உள்ள நிலையில் இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில் தமிழகத்தில் பி.ஜே.பி  போட்டியிட உள்ள நான்கு தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. பீகார் மாநிலத்தில் பி.ஜே.பி , நித்திஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராம் விலாஸ் பஸ்வான் தலைமையிலான லோக் ஜன சக்தி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கின்றனர்.

சத்துருகன் சின்ஹா, மோடி

இந்நிலையில், பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை நேற்று( மார்ச் 23) வெளியிடப்பட்டது. அதில் நடிகரும், அரசியல் வாதியுமான சத்ருகன் சின்ஹாவுக்கு அவர் ஏற்கனவே இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற பாட்னா சாகிப் தொகுதி மீண்டும் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த தொகுதி அவருக்குப் பதில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்துக்கு வழங்கப்பட்டுள்ளது,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

பாட்னா சாகிப்  தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்ததற்கு தன்னுடைய ட்விட்டர் மூலமாக நன்றி தெரிவித்துள்ள பிரசாத், “ நான் தேசிய அரசியலில் பெரும் கவனத்தைச்  செலுத்தி வந்தாலும், பாட்னா எனும் போது ஒரு உணர்வு பூர்வமான தொடர்பு ஏற்படுகின்றது” எனக் குறிப்பிட்டுள்ளார். இது சத்ருகன் சின்ஹாவுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் இரு தினங்களில் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்திற்காக  பீகார் செல்ல உள்ள நிலையில் ராகுல் காந்தி முன்னிலையில் சத்ருகன் சின்ஹா காங்கிரஸில் இணைய உள்ளார் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.