“சுயேச்சை வேட்பாளருக்கு  ஆதரவு!” - குமாரசாமிக்கு செக் வைக்கும் பாஜக | bjp support independent candidate in mandya

வெளியிடப்பட்ட நேரம்: 09:40 (24/03/2019)

கடைசி தொடர்பு:09:40 (24/03/2019)

“சுயேச்சை வேட்பாளருக்கு  ஆதரவு!” - குமாரசாமிக்கு செக் வைக்கும் பாஜக

க்களவைத் தேர்தலில் கர்நாடக முதல்வரின் மகனுக்கு எதிராகப் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து அதிரடி காட்டியிருக்கின்றது பி.ஜே.பி.

சுமலதா

 

கர்நாடக, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த தொகுதிகளுக்கான பி.ஜே.பியின்  இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா நேற்று வெளியிட்டார். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கின்றனர். மாண்டியா மக்களவைத் தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பாகக்  கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகனும், முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் பேரனுமாகிய நிக்கில் கவுடா போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சமீபத்தில் இறந்த முன்னாள் மாண்டியா தொகுதி மக்களவை உறுப்பினரும், நடிகருமான அம்பரீஷ் அவரின் மனைவி சுமலதா போட்டியிட உள்ளதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் மாண்டியா தொகுதியில் சுயேச்சையாகக் களம் காணும் சுமலதாவுக்கு முழு ஆதரவு அளிப்பதாக பி.ஜே.பியிடமிருந்து அதிகார பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. சுமலதாவின் கணவர் அம்பரீஷ் ஏற்கனவே மூன்று  முறை மாண்டியா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.