``இரண்டு இந்தியாவை உருவாக்க முயற்சி செய்கிறார் பிரதமர் மோடி' - ராகுல் காந்தி குற்றச்சாட்டு! | Narendra Modi has been trying to create two Indias, says Rahul Gandhi

வெளியிடப்பட்ட நேரம்: 18:50 (26/03/2019)

கடைசி தொடர்பு:10:24 (27/03/2019)

``இரண்டு இந்தியாவை உருவாக்க முயற்சி செய்கிறார் பிரதமர் மோடி' - ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

கடந்த ஐந்து வருட பா.ஜ.க ஆட்சியில், இரண்டு இந்தியாவை உருவாக்க பிரதமர் மோடி முயற்சி செய்துவருவதாக பேசியிருக்கிறார் ராகுல் காந்தி.

                             ராகுல் காந்தி

ராஜஸ்தானில் நடைபெற்ற காங்கிரஸின் ஜன் சங்கல்ப் பேரணியில் பேசிய ராகுல் காந்தி, ``அம்பானி போன்றவர்கள், தனி ஜெட்களைப் பயன்படுத்தும் பணக்காரர்களுக்கான ஓர் இந்தியாவையும், தொழிலாளர்களுக்கும், சிறு வணிகர்களுக்கும், வேலையில்லா இளைஞர்களுக்கும் பெண்களுக்குமான இன்னொரு இந்தியாவையும் உருவாக்க முயற்சி செய்கிறார் பிரதமர் மோடி. இந்த நாட்டின் கொடி ஒன்றுதான். எல்லோருக்கும் இந்நாட்டில் வாழ இடமிருக்கிறது. நரேந்திர மோடியின் இந்தியாவில், பணக்காரர்கள் மட்டும்தான் கனவு காண முடியும். ஏழைகளுக்கான திட்டங்கள் அனைத்தையும் நரேந்திர மோடியின் ஆட்சி பலவீனப்படுத்தியிருக்கிறது. கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் குறித்து மோடி புரிந்துகொள்ளவில்லை” என்று பேசியிருக்கிறார் ராகுல் காந்தி.

                                    ராகுல் காந்தி

பா.ஜ.க-வின் உறுப்பினர்கள் தங்கள் பெயருக்குப் பின், காவல்காரன் எனப் பொருள்படும் சவுக்கிதார் என்னும் வார்த்தையைச் சேர்த்திருப்பதைப் பற்றி பேசிய அவர், ``அம்பானிகளின் சவுக்கிதார் பிரதமர் மோடி. வேலையில்லாதவர்களின் வீட்டுக்கும், விவசாயிகளின் வீட்டுக்குமா சவுக்கிதாராக இருக்கிறார்?” என்று கேள்வியெழுப்பிய அவர், ``நாட்டில் உள்ள ஏழைக் குடும்பங்களை வறுமையிலிருந்து மீட்க விரும்புகிறோம். அதன் ஒருபடியாக குறைந்தபட்ச வருமானத்திட்டத்தைப் பயன்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்துவிட்டோம். இதன் மூலம் 25 கோடி ஏழைக் குடும்பங்கள் பயன்பெறுவர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைக் குடும்பங்களுக்கு 72,000 ரூபாய் பெற வழிவகை செய்யப்படும்” என்று தெரிவித்திருக்கிறார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க