ராகுலுக்கு அமேதியா? வயநாடா? -  எதிர்பார்ப்பில் காங்கிரஸ் தொண்டர்கள்! | Rahul Gandhi may contest lok sabha election from Kerala or amethi

வெளியிடப்பட்ட நேரம்: 21:10 (26/03/2019)

கடைசி தொடர்பு:10:26 (27/03/2019)

ராகுலுக்கு அமேதியா? வயநாடா? -  எதிர்பார்ப்பில் காங்கிரஸ் தொண்டர்கள்!

ராகுல்காந்தி

ரும் நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 11-ம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகள் முழுவீச்சில் செயல்பட்டுவருகின்றன. இரண்டு கட்சிகளும் அந்த மாநிலங்களுக்கு ஏற்றவாறு  வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தையும் தொடங்கி விட்டன. இதில் நட்சத்திர வேட்பாளர்களான நரேந்திர மோடி மற்றும் ராகுல் காந்தி போட்டியிடும் தொகுதிகள் குறித்து மக்களிடையே எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அந்த வகையில் பா.ஜ.க சார்பில் வாரணாசியில் நரேந்திர மோடி போட்டியிடுகிறார். அதற்கான அறிவிப்பை பா.ஜ.க தலைமை அறிவித்துவிட்டது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி போட்டியிடும் தொகுதி அறிவிப்பு எப்போது வெளியாகும் என  காங்கிரஸ் தொண்டர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சோனியா காந்தி நின்ற தொகுதியான அமேதி தொகுதியில் ராகுல்  காந்தி  போட்டியிடப் போவதாக பரவலாகத் தகவல் வெளியாகி இருந்தன. இதற்கிடையில் கேரள மாநிலம் வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிடப் போவதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், கேரளாவில் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள்  ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிட வேண்டும் என விருப்பம்  தெரிவித்துள்ளனர்.  அது தொடர்பாகத் தலைமைக்கு கடிதமும் அனுப்பியுள்ளதாக அங்குள்ள காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்கள் கூறுகின்றனர் வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிடக் கோரி போஸ்டர்கள், கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி பெறுவாரா என்ற குழப்பம் இருப்பதால், அவர் அமேதியில் நிற்கவில்லை என்றால் வயநாடு அல்லது கர்நாடக மாநிலத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடலாம் என காங்கிரஸ் பிரமுகர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், ராகுல் காந்தி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.