`பி.எம் நரேந்திர மோடி’ படத்தின் ரிலீஸைத் தள்ளிவைக்கணும்! - தயாரிப்பாளருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் | EC sends notice to 4 producers of film 'PM Narendra Modi'

வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (27/03/2019)

கடைசி தொடர்பு:13:00 (27/03/2019)

`பி.எம் நரேந்திர மோடி’ படத்தின் ரிலீஸைத் தள்ளிவைக்கணும்! - தயாரிப்பாளருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

பிரதமர் மோடியின் பயோபிக் படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்களுக்குத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

மோடி

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி வருகிறது. படத்துக்கு பி.எம் நரேந்திர மோடி எனப் பெயரிட்டுள்ளது படக்குழு. நடிகர் விவேக் ஓபராய் இந்தப் படத்தில் நரேந்திர மோடியாக நடித்துள்ளார். பிரியங்கா சோப்ரா நடித்த மேரி கோம் படத்தை இயக்கிய ஓமங் குமார், இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதில் மோடி டீ விற்பது, போராடி சிறை சென்றது, நடுரோட்டில் குளிரில் உறங்கிக்கிடப்பது போன்ற காட்சிகள் டிரெய்லரில் வெளியாகியுள்ளன. இந்தப் படம் அடுத்த மாதம் ஏப்ரல் 6-ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான வேலைகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 

இந்நிலையில், மக்களவை முதல்கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் ஏப்ரல் 6-ம் தேதி பி.எம் நரேந்திர மோடி படம் வெளியாவது அரசியல் உள்நோக்கம் கொண்டது எனக் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தன. இந்தப் புகாரை அடுத்து தற்போது இந்தியத் தேர்தல் ஆணையம் பி.எம் நரேந்திர மோடியின் தயாரிப்பாளர்கள் நான்கு பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைக்கக் கோரி இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல் இந்தப் படத்தின் விளம்பர போஸ்டர்களை வெளியிட்டதாகவும் இரண்டு செய்தித்தாள் நிறுவனங்களுக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம்

அதேபோல் ரயில் விமான டிக்கெட்டுகளில் பிரதமர் மோடியின் படத்தை நீக்காதது குறித்தும் ரயில்வே மற்றும் விமானத்துறை அமைச்சகங்களுக்குத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க