`பாலியல் தொந்தரவுகளால் வேலையை உதறும் 87% பெண்கள்!'- ஆய்வில் தகவல் | 87 % women likely to quit over sexual harassment: Survey

வெளியிடப்பட்ட நேரம்: 15:39 (27/03/2019)

கடைசி தொடர்பு:15:40 (27/03/2019)

`பாலியல் தொந்தரவுகளால் வேலையை உதறும் 87% பெண்கள்!'- ஆய்வில் தகவல்

பெண்களுக்கு பாலியல்  தொந்தரவு

 சக ஊழியர்களுடனான  பாலியல் தொந்தரவுகளால், 87 சதவிகித பெண்கள் வேலையைக் கைவிடுவதாகத் தனியார் வேலை வாய்ப்பு அமைப்பு ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

 சமீபத்தில், தனியார் வேலை வாய்ப்பு அமைப்பு ஒன்று ஆய்வு நடத்தி, அந்தப் புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் 87 சதவிகித பெண் ஊழியர்கள்,  சக பணியாட்களின் பாலியல் தொந்தரவுகளால் வேலையைக் கைவிடுவதாகத்  தெரிவிக்கிறது. மேலும், பொதுக்  காரணங்களால் இரு பாலரும் வேலை இழக்கும்  அவலமும்  தொடர்வதாக  அந்தப்  புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. குறிப்பாக, தொழில்நுட்ப அறிவு ரீதியாக  உள்ள  பிரச்னைகள் மற்றும் உற்பத்தித் தோல்வி  உள்ளிட்ட  பிரச்னைகளால்  வேலையைக் கைவிடுவதாக  அந்தப் புள்ளிவிவரம் கூறுகிறது.

அதோடு, ஒரு நிறுவனத்தின் உயர் பதவியில் இருப்பவர்கள், குறிப்பாக  தலைமைச் செயல்  இயக்குநர்கள் மற்றும் வேறு சில முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள்  செய்யும் அரசியல் சூழ்ச்சி,  அதிகார  துஷ்பிரயோகம்,  சொந்த விருப்பு வெறுப்புகளைத் திணிப்பவர்களாக  இருப்பதாலும், அவர்களுக்குக்  கீழே  பணியாற்றும் ஊழியர்களே  தங்களுடைய வேலையைக்  கைவிடுவதாக அந்த அமைப்பு கூறியுள்ளது .