இந்தியப் பொருளாதார வளர்ச்சி 7% என்பதை நம்ப முடியாது! - ரகுராம் ராஜன் | No proof for GDP growth numbers Raghuram rajan

வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (27/03/2019)

கடைசி தொடர்பு:17:30 (27/03/2019)

இந்தியப் பொருளாதார வளர்ச்சி 7% என்பதை நம்ப முடியாது! - ரகுராம் ராஜன்

இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7% என்பதை எந்த கணக்கீட்டின்படி சொல்கிறார்கள் என்றே தெரியவில்லை என ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் குறிப்பிடுகையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதத்தை எட்டவில்லை என்றே கருதுகிறேன். எந்தப் புள்ளிவிவரத்தின் அடிப்படையில் 7 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளதாகக் கூறுகிறார்கள் என்பதே தெரியவில்லை.

ரகுராம் ராஜன்

பணமதிப்பு நீக்க நடவடிக்கையை மேற்கொண்டு பலகாலமாகிவிட்டது. அதனால் உரிய பலன் கிடைத்துள்ளதா, தோல்வியடைந்துள்ளதா என்பது குறித்தெல்லாம் சிந்திக்க வேண்டும். இந்தியாவில் வேலைவாய்ப்பு குறித்த தரவுகளும் நம்பகமானதாக இல்லை. வேலைவாய்ப்பு குறித்த தகவல்களும் மத்திய அரசின் தலையீட்டால் மாற்றியமைக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, இந்தியாவின் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்த கணக்கீட்டை பாரபட்சமற்ற ஒரு அமைப்பினைக்கொண்டு நடத்த வேண்டும். அப்படிக் கிடைக்கும் தரவுகள் மீதுதான் மக்களுக்கு நம்பிக்கை வரும். 

ஜிடிபி

குறிப்பாக, இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி 7% என்பதை மத்திய அரசின் பொறுப்பிலிருக்கும் அமைச்சர் ஒருவரே நம்பவில்லை. நாட்டில் வேலைவாய்ப்பின்மைப் பிரச்னை பெருமளவில் உள்ளது. இந்தச் சூழலில் எப்படி7% வளர்ச்சி சாத்தியமாகும் என்று அவர் கேட்கிறார். மக்களின் கேள்வியும் அதுவாகவே உள்ளது. 

உள்நாட்டுப் பொருளாதாரம் வலிமையாக இருப்பதே நாட்டின் பாதுகாப்புக்கு முக்கிய அம்சமாகும். இன்னும் அதிக வேலைவாய்ப்புகளை அரசாங்கம் உருவாக்க வேண்டும். ஆனால், அதுகுறித்து அவர்கள் ஈடுபாடு காட்டுவதே இல்லை என்பது வருத்தமான செய்தி என்றார் அவர்.