`சார் ப்ளீஸ் இன்னொருவாட்டி என் ரத்தத்தை துடைச்சுவிடுங்க! - ராகுலிடம் கெஞ்சிய பத்திரிகையாளர் | Hurt Journalist Helped By Rahul Gandhi

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (27/03/2019)

கடைசி தொடர்பு:10:13 (29/03/2019)

`சார் ப்ளீஸ் இன்னொருவாட்டி என் ரத்தத்தை துடைச்சுவிடுங்க! - ராகுலிடம் கெஞ்சிய பத்திரிகையாளர்

விபத்தில் காயமடைந்த பத்திரிகையாளரை காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ராகுல் காந்திக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

ராகுல் காந்தி

இன்று மாலை ராகுல் காந்தி மத்திய டெல்லி, ஹுமாயூன் சாலையில் தனது காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த சாலையில் பத்திரிகையாளர் ஒருவர் அடிப்பட்ட நிலையில் நின்றுகொண்டிருந்தார். உடனே ராகுல் காரை நிறுத்தி பத்திரிகையாளரை ஏற்றிக்கொண்டார். விபத்தில் அடிபட்டவர், ராஜஸ்தான் தின நாளிதழ் ஒன்றின் உரிமையாளரான ராஜேந்திர வியாஸ். அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் ரத்தம் வடிந்தது. ராகுல் காந்தி தனது கைக்குட்டையால் அடிபட்டவரின் ரத்தத்தைத் துடைத்தார். அதைப் பத்திரிகையாளருடன் வந்தவர் வீடியோ எடுத்தார். அந்த வீடியோவில் ராகுல் காந்தி காயப்பட்டவரின் ரத்தத்தைத் துடைக்கும்போது, அந்த நபர், ``சார் ப்ளீஸ் இன்னொரு வாட்டி உங்க கைகுட்டையால என் ரத்தத்தை துடைத்துவிடுங்க; நான் வீடியோ எடுத்து செய்திக்குப் பயன்படுத்திக் கொள்வேன்’’ என்று வலியுடன் கூறியுள்ளார். அதற்கு ராகுல் காந்தி சிரித்துக்கொண்டே தலை அசைக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

காயமடைந்த பத்திரிகையாளரை எய்ம்ஸ்  மருத்துவமனையில் சேர்த்துவிட்டு ராகுல் காந்தி அங்கிருந்து சென்றுள்ளார். ராகுல் காந்தி மிகவும் மனிதாபிமானம் உள்ளவர் என்று இணையவாசிகள் பாராட்டி வருகின்றனர்.   

இந்தச் சம்பவம் பற்றிய உங்களின் கருத்தை இங்கே பதிவு செய்யலாம்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க