பார்வையற்றோருக்காக ஆடியோ வடிவில் சி.பி.எம் தேர்தல் அறிக்கை! | cpim released election manifesto in audio format

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (28/03/2019)

கடைசி தொடர்பு:20:00 (28/03/2019)

பார்வையற்றோருக்காக ஆடியோ வடிவில் சி.பி.எம் தேர்தல் அறிக்கை!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் அறிக்கை

டைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது தேர்தல் அறிக்கையை இன்று டெல்லியில் வெளியிட்டது. அந்தத் தேர்தல் அறிக்கை அனைத்து தரப்பு மக்களும் தெரிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாற்றுத் திறனாளிகளைக் கருத்தில் கொண்டு, தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக ஆடியோவாக வெளியிட்டுள்ளது. டெல்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அலுவலகமான ஏ.கே.ஜி. பவனில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், பி.ராமச்சந்திரன் பிள்ளை, பிருந்தா காரத் உள்ளிட்டோர் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டு உரையாற்றினர். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த முறையை மாற்றுத்திறனாளிகள் சங்கம் வரவேற்றுள்ளது. இது குறித்துப் பேசிய தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் பொதுச் செயலாளர் ``இந்திய தேர்தல் வரலாற்றில் பார்வை பாதித்தோருக்கு வசதியாக முதன் முறையாக ஆங்கில பேசு மொழியில் ஆடியோ வடிவில் தேர்தல் அறிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  வெளியிட்டிருப்பது பாராட்டுக்குரியது. இதுபோன்ற முறையை எந்த அரசியல் கட்சிகளும் இதுவரை கையாளவில்லை. இதேபோன்று அனைத்து துறைகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்குள்ள ஏற்றத் தாழ்வுகளை அகற்ற பொதுப் பணியில் உள்ளவர்கள் செயலாற்ற வேண்டும்" என்றார்.