கடவுளின் தேசத்தில் களமிறங்குவாரா ராகுல்? - உம்மன் சாண்டி கோரிக்கை  | Rahul not in Wayanad? - Chandy says it's just a request from Kerala unit

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (28/03/2019)

கடைசி தொடர்பு:10:35 (30/03/2019)

கடவுளின் தேசத்தில் களமிறங்குவாரா ராகுல்? - உம்மன் சாண்டி கோரிக்கை 

 

ராகுல் காந்தி  காங்கிரஸ்  கட்சித் தலைவர்

டைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக  மூத்த காங்கிரஸ் காங்கிரஸ் தலைவரும் முன்னாள்  கேரள முதலமைச்சருமான  உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.  

அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி கேரள மாநிலம் வயநாட்டில் போட்டியிடப் போவதாக கடந்த ஒரு வாரமாகக் காங்கிரஸ் தொண்டர்கள் பேசி வருகின்றனர். அதோடு கேரள மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் "RAGA WAYANAD"  என்ற (ஸ்லோகத்தை) முழக்கத்தை எழுப்பியதோடு அங்கு போட்டியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். மேலும், ராகுல் காந்தியின் போஸ்டர்கள்,  கட் அவுட்களும் வயநாட்டை ஆக்கிரமித்திருந்தன. 

 தேர்தலில்  ராகுல் போட்டியிட வேண்டும் - உம்மன்சாண்டி

இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் கேரள முதலமைச்சருமான உம்மன் சாண்டி கேரள காங்கிரஸ் கட்சித் தரப்பிலிருந்து ராகுல் காந்தி வய நாட்டில் போட்டியிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், கடவுளின் தேசமான கேரளத்தில் போட்டியிடுவாரா என்பது குறித்து இன்னும் அவர் முடிவு செய்யவில்லை"என்றார்.