டைம்பாஸுக்காக எழுதிய ஆன்லைன் தேர்வு! - மும்பை மாணவனுக்கு கூகுள் கொடுத்த இன்ப அதிர்ச்சி #Shocking | Mumbai Boy Lands Rs 1.2 Crore Job At Google

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (29/03/2019)

கடைசி தொடர்பு:20:22 (29/03/2019)

டைம்பாஸுக்காக எழுதிய ஆன்லைன் தேர்வு! - மும்பை மாணவனுக்கு கூகுள் கொடுத்த இன்ப அதிர்ச்சி #Shocking

ஒவ்வோர் ஆண்டும் பொறியியல் படித்து முடித்துவிட்டு முன்னணி ஐடி நிறுவனங்களில் வேலை கிடைக்கும் என்று இளைஞர் இளைஞிகள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், மும்பை இளைஞர் ஒருவரோ பெரிதாக முயற்சி ஏதும் எடுக்காமலேயே கூகுள் நிறுவனத்திலேயே வேலை கிடைத்துள்ளது.

கூகுள்

மும்பையைச் சேர்ந்த அப்துலா கான், ஸ்ரீஎல்ஆர் திவாரி பொறியியல் கல்லூரியில் பி.இ- கம்யூட்டர் சைன்ஸ் படித்து வருகிறார். முதலில் ஐ.ஐ.டி-யில் சேர்வதற்காக நுழைவுத் தேர்வு எழுதி, தோல்வி அடைந்ததால் இந்தப் பொறியியல் கல்லூரியில் சேர்ந்துவிட்டார்.

வீட்டில் இருக்கும்போது இணையத்தில் புரோகிராமிங் தொடர்பாக எதையாவது படித்துக்கொண்டிருப்பார். ஒருமுறை கூகுள் நடத்திய ஆன்லைன் புரோகிராமிங் கண்டஸ்டில் பொழுதுபோவதற்காகப் பங்கேற்றார். சில தினங்களில் அவருக்குக் கூகுள் நிறுவனத்திலிருந்து நேர்காணலுக்கு அழைப்பு வந்தது. அப்துலாவுக்கு இதை நம்பவே முடியவில்லை. நேர்காணல் லண்டனில் இருக்கும் கூகுள் அலுவலகத்தில் நடைபெற்றது. அதிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து வரும் செப்டம்பர் மாதம் லண்டன் அலுவலகத்தில் பணிக்கு சேருமாறு பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டுள்ளது. ஆண்டு சம்பளம் எவ்வளவு தெரியுமா. ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய். சில சமயங்களில் நம்மிடம் இருக்கும் திறமை நமக்கே தெரிவது கிடையாது. ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வில் வெற்றி பெற முடியாத அப்துலா இன்று லண்டனில் கூகுள் நிறுவனத்தில் வேலை செய்யப் போகிறார்.

படித்துக்கொண்டிருக்கும்போதே கூகுளில் வேலைக்குச் சேரும் இரண்டாவது மாணவர் இவர். கடந்த 2018ம் ஆண்டில் ஐ.ஐ.டி-யில் படித்துக் கொண்டிருந்த சினேகா என்னும் மாணவி, 1.2 கோடி ரூபாய் ஆண்டு சம்பளத்தில் கூகுளில் வேலைக்குச் சேர்ந்தார்.

Credits : Times Of India

நீங்க எப்படி பீல் பண்றீங்க