பள்ளி மாணவர்களிடையே தேர்தல் வாக்குறுதி பத்திரம் ... கண்டிக்கும் மே17 இயக்கம்! | Election Voting Issue Among School Students ... May 17th Condemn

வெளியிடப்பட்ட நேரம்: 19:50 (29/03/2019)

கடைசி தொடர்பு:19:50 (29/03/2019)

பள்ளி மாணவர்களிடையே தேர்தல் வாக்குறுதி பத்திரம் ... கண்டிக்கும் மே17 இயக்கம்!

ள்ளி மாணவர்களிடம் வழங்கப்படும் வாக்குறுதி மொழி பத்திரத்தைத் தேர்தல் ஆணையம் வழங்கி அதில் பெற்றோர்களிடம் கையொப்பம் வாங்கி வரச் சொல்வது சட்டவிரோத செயல் என்று மே பதினேழு இயக்கம் கண்டித்துள்ளது.  

தேர்தல் வாக்குறுதி

இது குறித்துப் பேசிய அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் லேனா குமார் ``தேர்தல் ஆணையத்தின் மூலமாக அனைத்துப் பள்ளிகளில் உள்ள மாணவர்களிடத்திலும் ஒரு படிவம் வழங்கப்பட்டுள்ளது.Sankalph Pathra என்ற பெயரில் வழங்கப்பட்டுள்ள அந்தப் பத்திரத்தில் `நாங்கள் கண்டிப்பாக வாக்களிப்போம்' என்று மாணவர்களின் பெற்றோர்களிடத்தில் கையெழுத்துப் பெற்று வர வேண்டும் என மாணவர்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அந்தப் படிவத்தில் குடும்ப உறுப்பினர்களின் வாக்காளர் பெயர் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண் குறிப்பிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். தேர்தல் நேரத்தில் வழங்கப்பட்டுள்ள இப்பத்திரம் பெரும் மோசடியாகும்.

வாக்கு அளிப்பது என்பது அவரவர் ``ஜனநாயகம் '.. மக்கள் அனைவருக்கும் நமது இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் உரிமை. அது ஒருவர் யாருக்கு வாக்களிப்பது என்பதையும், வாக்களிப்பதா, கூடாதா என்பதையும் மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அவர்களைக் கட்டாயப்படுத்தி உறுதிப் பத்திரம் பெறுவதென்பது அரசியல் சாசனத்துக்கே விரோதமான செயலாகும். இச்செயல்முறையை தேர்தல் ஆணையம் உடனடியாக நிறுத்த வேண்டும்.

லேனா குமார் மே 17 இயக்கம்

மேலும், இப்படிவத்தில் வாக்காளர் அடையாள அட்டை எண் பெறப்படுவதால் அதைப் பயன்படுத்தி ஆளும் கட்சியினர் கள்ள ஓட்டுகளை பதிவு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது. பா.ஜ.க-வை கள்ள வாக்குகள் மூலம் வெற்றி பெற வைப்பதற்கான வாய்ப்புகளைத் தேர்தல் ஆணையம் வழங்குகிறதா என்ற கேள்வியை எழுப்ப வேண்டியிருக்கிறது.

பெற்றோர்களே உங்கள் வாக்குகள் கள்ள வாக்குகளாக மாறுவதற்கான வாய்ப்பை அவர்களுக்கு வழங்காதீர். இந்தப் படிவம் சட்ட விரோதமானது. அப்படிவத்தை பூர்த்தி செய்ய வலியுறுத்தி பள்ளிகள் கட்டாயப்படுத்தினால் அதுவும் சட்ட விரோதமே. பள்ளி நிர்வாகத்தையும், தேர்தல் ஆணையத்தையும் இப்படிவம் பெறும் செயல்முறையை உடனே  நிறுத்த வேண்டும்"   என்றார்.