கட்சியில் சேர்ந்த இரண்டே நாளில் நடிகை ஊர்மிளாவுக்கு சீட்! | Urmila Matondkar from Mumbai North Lok Sabha seat cog says

வெளியிடப்பட்ட நேரம்: 20:45 (29/03/2019)

கடைசி தொடர்பு:11:01 (30/03/2019)

கட்சியில் சேர்ந்த இரண்டே நாளில் நடிகை ஊர்மிளாவுக்கு சீட்!

 

காங்ரிசில் இணைந்த ஊர்மிளா

ந்தித் திரையுலகின் முன்னணி நடிகையான ஊர்மிளா மடோன்கர் தமிழில் கமல்ஹாசனுடன் `இந்தியன்’ படத்தில் நடித்தவர். இவர் காங்கிரஸ் கட்சியில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்புதான் இணைந்தார். பின்னர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்துக்கே சென்று சந்தித்து வாழ்த்து பெற்றார். அவரை ராகுல் காந்தி வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிலையில், அவருக்கு வடக்கு மும்பையில் போட்டியிட, காங்கிரஸ் தலைமை வாய்ப்பு வழங்கியுள்ளது. இதையடுத்து, இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார். பா.ஜ.க சார்பில் நிறுத்தப்பட்டுள்ள கோயல் ஷெட்டியை எதிர்த்து அவர் போட்டியிடுகிறார். வடக்கு மும்பைத் தொகுதியின் சிட்டிங் எம்.பி-யான கோயல் ஷெட்டி, கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட சஞ்சய் நிருபத்தைத் தோற்கடித்தார்.

இந்தத் தேர்தலில் போட்டியிட, கட்சியில் சேர்ந்த இரண்டே நாளில் ஊர்மிளா நிறுத்தப்பட்டிருப்பது காங்கிரஸ் பிரமுகர்களை உற்றுநோக்க வைத்துள்ளது. இதுகுறித்து மும்பை காங்கிரஸ் தலைவர் மிலிந்த் தியோரா கூறுகையில், ``ஊர்மிளாவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறேன். மிகவும் வலிமையான வேட்பாளர். பேச்சு சுதந்திரத்துக்கும் கருத்து சுதந்திரத்துக்கும் முக்கியத்துவம் அளிப்பவர். அவர் வெற்றி பெற்று அவருடைய குரல் நாடாளுமன்றத்திலும் ஒலிக்க வேண்டும்’’ என்றார்.