``ஐந்து லட்சம் குறைவு, அதிகம் வேண்டும்!" - குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பெண் முறையீடு | Gujarat riot affected women refuses to take five lakhs rupees compensation

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (30/03/2019)

கடைசி தொடர்பு:19:00 (30/03/2019)

``ஐந்து லட்சம் குறைவு, அதிகம் வேண்டும்!" - குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பெண் முறையீடு

குஜராத் மாநிலத்தில், 2002-ம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தின்போது ஐந்து மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானோ, குஜராத் கலவர கும்பலால் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார், இந்த வன்முறைச் சம்பவத்தில் அவர் குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் கொல்லப்பட்டனர்.

இது தொடர்பான வழக்கில், குஜராத் மாநிலத்தில், நேர்மையான விசாரணை நடக்கவில்லை என்று புகார் எழுந்த பட்சத்தில், வழக்கு மும்பை நீதிமன்றத்துக்கு மாற்றி அமைக்கப்பட்டது.

குஜராத்

மும்பை நீதிமன்றம், குற்றச் செயலில் ஈடுபட்டவர்களுக்கும் அவர்களின் குற்றங்களை மறைக்க உதவிய அதிகாரிகள் ஆகியோர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கியது. இவ்வழக்கில் குற்றத்தை மறைத்ததாக நிரூபிக்கப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்பட்ட சில அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது குஜராத் அரசு. இந்நிலையில், குஜராத் அரசு, உடனடியாக அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

அதே சமயம் குஜராத் அரசு தரப்பு வழக்கறிஞர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஐந்து லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கியுள்ளது, இதை பில்கிஸ் பானோ பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார், இது குறித்து வாதாடிய அவரது வழக்கறிஞர், பில்கிஸ் பானோ அடைந்த பாதிப்புகளுக்கு அவருக்கான நிவாரணம் ஐந்து லட்சம் என்பது மிகக் குறைவு எனவும், அதை அதிகமாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

 மேற்கொண்டு குஜராத் அரசு, குற்றம்சாட்டப்பட்ட அரசு அதிகாரிகள் மீதி விரைந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஆவண செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்த அரசு அதிகாரிகளில் ஒருவர் விரைவில் பணிஓய்வு பெற இருப்பதாகவும், இதுவரை அவரது பென்ஷன் உள்ளிட்ட எந்தப் பணிக்கும் பாதிப்பு இல்லாமல் குற்றம் புரிந்தவர்கள் வழக்கமாக பணிகளை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். 

இவ்வழக்கு ஏப்ரல் 23-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.