`காஷ்மீரில் தீவிரவாதத்துக்கு இந்தியாவும் காரணம்!’ - உமர் அப்துல்லா | Kashmir's problem is militancy and not article 35 A, omar abdullah hits back at arun jaitley

வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (30/03/2019)

கடைசி தொடர்பு:20:20 (30/03/2019)

`காஷ்மீரில் தீவிரவாதத்துக்கு இந்தியாவும் காரணம்!’ - உமர் அப்துல்லா

மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி, `இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 35ஏ ஒரு வரலாற்றுப் பிழை’ என்று தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டிருந்தார். அதற்கு காஷ்மீர் அரசியல் கட்சிகளிடமிருந்து தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்துவருகின்றன.

காஷ்மீர் ஒமர் அப்துல்லா

தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா ஜெட்லியின் இந்த பதிவுக்கு எதிராகக் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். அவர் கூறுகையில், “இந்தத் தேசத்தில் ஜம்மு-காஷ்மீருக்கும் மட்டும் சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்படவில்லை. இமாசலப்பிரதேசம், அந்தமான் தீவுகள், லட்சத்தீவு, வடகிழக்குப் பிராந்தியங்கள் என பல இடங்களுக்குச் சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளன. இப்படியிருக்க காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்டிருப்பதை மட்டும் அருண் ஜெட்லி சுட்டிக்காட்டியிருக்கிறார். உண்மையில், சிறப்பு அந்தஸ்துதான் காஷ்மீர் மக்களின் பாதுகாப்பை இத்தனை நாள்கள் உறுதி செய்திருக்கிறது.

காஷ்மீரில் நடக்கும் பிரச்னைகளுக்குத் தீவிரவாதம் மட்டும்தான் காரணமே தவிர, சிறப்பு அந்தஸ்து அதற்கான காரணம் இல்லை. இங்கே புழங்கும் தீவிரவாதத்துக்கு பாகிஸ்தான் ஒருவகையில் காரணம் என்றால், அத்தனை தீவிரவாதத்துக்கும் வழிவகுத்துக் கொடுத்த இந்தியாவும் அதற்கு ஒரு காரணம். களநிலவரம் தெரியாமல் நிதித்துறை அமைச்சர் பேச வேண்டாம்’’ என்று தனது கடும் கண்டனங்களைப் பதிவு செய்திருக்கிறார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க