`தலைகீழாக தாமரை!'- பா.ஜ.க-வுக்காக தேர்தல் அறிக்கையை கிண்டலுடன் வெளியிட்ட காங்கிரஸ் | Congress puts up a fake manifesto for BJP, creates controversy

வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (01/04/2019)

கடைசி தொடர்பு:11:00 (02/04/2019)

`தலைகீழாக தாமரை!'- பா.ஜ.க-வுக்காக தேர்தல் அறிக்கையை கிண்டலுடன் வெளியிட்ட காங்கிரஸ்

நாடாளுமன்றத் தேர்தல் சமயம், தேர்தல் அறிக்கைகளில் சுவாரஸ்யத்துக்குப் பஞ்சமில்லை. ஆனால், ஒருபடி மேலே போய் பாரதிய ஜனதா கட்சிக்காக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது எதிர்க்கட்சியான காங்கிரஸ். தலைகீழாகத் தொங்கும் தாமரைச் சின்னம் தாங்கிய அந்தத் தேர்தல் அறிக்கை முழுக்க முழுக்க கிண்டல்களால் நிரம்பியிருக்கிறது. ’ஒரே இந்தியா வேலையற்ற இந்தியா’ என்னும் அறிக்கையின் முதல் பக்கத்தில் இருகரங்களை உயர்த்தி மோடி நம்மை வரவேற்கிறார்.

இந்த ஐந்தாண்டுகளில் அவர் கொடுத்த வாக்குறுதிகளும் அது சார்ந்து நிறைவேற்றப்பட்டவையும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. ஜனநாயகம் என்கிற பெயரில் சர்வாதிகாரம், பேச்சு சுதந்திரம் இங்கே செல்லாது, கொஞ்சம் கொஞ்சமாக தேசியப் பொருளாதாரத்தைக் கொல்லுவது, திருடர்களுக்குப் பாதுகாப்பு, ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினர், தரவுகளில் கோல்மால் செய்தது, பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யாதது, இளைஞர்களுக்கான நம்பிக்கையான வேலைவாய்ப்பை உறுதிசெய்யாதது, சுயவிளம்பரதாரியாக இருப்பது, மக்களிடையே வெறுப்பரசியலைத் திணித்தது, கருத்து கூறுபவர்கள் தேசத் துரோகிகள்  .. என பெரும் பட்டியலை காங்கிரஸ் அறிக்கை வாசிக்கிறது. கிண்டல் அறிக்கை, உங்கள் பார்வைக்காகக் கீழே!..


பகடி தேர்தல் அறிக்கை

பகடி தேர்தல் அறிக்கை

பகடி தேர்தல் அறிக்கை

பகடி தேர்தல் அறிக்கை

நீங்க எப்படி பீல் பண்றீங்க